Anantham

டாஸ் போடுற நேரத்துல.. 'கோலி' பற்றி 'டு பிளெஸ்ஸிஸ்' சொன்ன விஷயம்.. கடும் உற்சாகத்தில் ரசிகர்கள்.. "இன்னைக்கி இருக்கு சரவெடி.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Apr 26, 2022 08:26 PM

15 ஆவது ஐபிஎல் தொடரில், பாதி லீக் போட்டிகளுக்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர அனைத்து அணிகளும் பிளே ஆப் பந்தயத்தில் உள்ளது. 

Faf du plessis says virat kohli to open batting against rajasthan

Also Read |  "ஹர்திக்கோ, தோனியோ.. யார பாத்தும் அந்த பையன் பயப்படுறது இல்ல.." புகழ்ந்த ஆகாஷ் சோப்ரா.. "அவரு தான் இப்போ பெஸ்ட்.."

அனைத்து அணிகளுக்குமே இனி வரும் போட்டிகளின் வெற்றிகள் மிக முக்கியமானது என்பதால், அடுத்தடுத்த ஒவ்வொரு போட்டிகளிலும் அனல் பறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அந்த வகையில், இன்று (26.04.2022) நடைபெற்று வரும் லீக் போட்டியில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

Faf du plessis says virat kohli to open batting against rajasthan

ஆர்சிபி சந்தித்த விமர்சனம்

ராஜஸ்தான் அணி தங்களின் கடைசி போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, புள்ளிப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. மறுபக்கம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில், 68 ரன்களில் ஆல் அவுட்டாகி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்திருந்தது ஆர்சிபி. 8 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக பெங்களூர் திகழ்ந்தாலும், மிக குறைவான ரன்களில் ஆல் அவுட்டானது, அந்த அணி மீது அதிக விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.

Faf du plessis says virat kohli to open batting against rajasthan

முக்கியமான மேட்ச்..

இது ஒரு பக்கம் இருக்க, ஆர்சிபியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளில் (லக்னோ மற்றும் ஹைதராபாத்) கோல்டன் டக்கில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருந்தார். இதனால், அவரை சுற்றியும் அதிக விமர்சனம் உருவாகி இருந்தது. ஆர்சிபி மற்றும் கோலி மீது விமர்சனங்கள் உருவாகியுள்ளதால், இந்த போட்டி அந்த அணிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

டு பிளெஸ்ஸிஸ் சொன்ன விஷயம்

அப்படி ஒரு சூழ்நிலையில், டாஸ் போடும் போது டு பிளெஸ்ஸிஸ் சொன்ன விஷயம் ஒன்று, கோலி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. "அனுஜ் ராவத்துக்கு பதிலாக, இன்று ராஜட் களமிறங்குகிறார். இதனால், விராட் இன்று தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அவர் தொடக்க வீரராக வரவுள்ளதால், ரியல் விராட்டின் ஆட்டத்தை பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம். இது ஒரு புதிய விளையாட்டு. புதிய நாள் மற்றும்  நாங்கள் நன்றாக ஆட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Faf du plessis says virat kohli to open batting against rajasthan

நடப்பு ஐபிஎல் தொடரில், தொடர்ந்து சொதப்பி வரும் கோலி, மூன்றாவது வீரராக தான் ஆடி வருகிறார். தற்போது முந்தைய சீசன்கள் போல, மீண்டும் தொடக்க வீரராக, அதுவும் பாப் டு பிளெஸ்ஸிஸ்ஸுடன் இணைந்து கோலி ஆடவுள்ளதால், இன்று இரவு அவரது பேட்டிங்கில் நிச்சயம் தாக்கம் இருக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #CRICKET #FAF DU PLESSIS #VIRAT KOHLI #RAJASTHAN ROYALS #IPL 2022 #ஐபிஎல் #ஆர்சிபி #ராஜஸ்தான் ராயல்ஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Faf du plessis says virat kohli to open batting against rajasthan | Sports News.