‘நல்லது, கெட்டது’.. ‘ரெண்டு பக்கத்தையும் காட்டிய கொரோனா’... ‘இதுக்கு அப்புறம்’... ‘உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சியான தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இணையவழியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. இதனால், கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்’ என கூறினார்.
மேலும், ‘கொரோனா தடுப்பூசி வினியோக நெரிசலில் ஏழைகளையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதன் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டி உள்ளது. இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது’ என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
