Anantham

14,000 அடி உயரத்துல விமானத்தை மாத்தி சாகசம் செய்ய முயற்சித்த விமானிகள்.. உலகை உலுக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 26, 2022 08:36 PM

14,000 அடி உயரத்தில் சாகசத்தில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Daring Mid Air Plane Swap Stunt Ends In Crash in Arizona

Also Read | டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய மஸ்க்.. சோமோட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் போட்ட மாஸ் கமெண்ட்..!

வரலாற்றில் முதன்முறையாக

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, உலகின் முதல் முறையாக plane swap எனப்படும் சாகசத்தில் ஈடுபட்டனர் இரு வீரர்கள். அதாவது ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு தாவும் முயற்சியே plane swap எனப்படுகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற இந்த திக் திக் சாகசம் சோகத்தில் முடிவடைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த லூக் ஐக்கென்ஸ் மற்றும் ஆண்டி ஃபாரிங்டன் ஆகிய இரு விமானிகள் இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ரெட்புல் நிறுவனத்தின் அங்கமான இவர்கள் ஸ்கை டைவிங் எனப்படும் சாகசத்திலும் பயிற்சி பெற்றவர்கள்.

Daring Mid Air Plane Swap Stunt Ends In Crash in Arizona

Plane Swap

இந்த சாகச திட்டத்தின்படி, ஒரு நபர் மட்டுமே பயணிக்கக்கூடிய செஸ்னா 182 ரக விமானத்தில் சுமார் 14,000 அடி உயரத்தில் பயணிக்க வேண்டும். இரு விமானங்களும் அருகில் வரும்போது விமானிகள் எதிர் விமானத்திற்கு தாவிச் சென்று அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு 1 நிமிடம் மட்டுமே அவகாசம் இருக்கும். மணிக்கு 140 மைல் வேகத்தில் விமானங்கள் பறக்கும்போது இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சோகம்

ஆனால், திட்டப்படி இந்த சாகசம் நடைபெறவில்லை. விமானி ஒருவர் வெளியே தாவிய போது  அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து சுழல துவங்கியுள்ளது. இதனால், வேறு வழியின்றி பாராசூட் மூலமாக அவர் பத்திரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சாகச திட்டம் தோல்வியடைந்தாலும் இரு விமானிகளும் பத்திரமாக தரைக்கு திரும்பியதாக ரெட்புல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Daring Mid Air Plane Swap Stunt Ends In Crash in Arizona

14,000 அடி உயரத்தில் சாகசத்தில் ஈடுபட்ட விமானங்களில் ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் குறித்து தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #AIR PLANE #AIR PLANE SWAP STUNT #ARIZONA #AIR PLANE SWAP STUNT ENDS IN CRASH

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Daring Mid Air Plane Swap Stunt Ends In Crash in Arizona | World News.