யுவதியின் நடனத்தை ’கேலி செய்த' நெட்டிசன்கள்.. உண்மை அறிந்த பின் கேட்ட மன்னிப்பு.. உருகவைத்த தந்தை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | May 11, 2019 05:51 PM

இன்றைய இணைய தலைமுறை எல்லாவற்றையும் கிண்டலும் கேலியுமாக பார்க்கும் மீம்ஸ் கலாச்சாரத்துக்குள் பிரவேசித்தாலும், அவ்வப்போது உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிலர் தவறுவதில்லை.

Heart-warming moment 16-year-old Ella with Down\'s Syndrome

எனினும் தனிமனிதர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வகையில் இருக்கும் சமூக வலைதளங்களில் அனைத்து விதமான மனிதர்களும் இயங்குவதால், அவர்களின் விமர்சனங்களுக்கும், பாராட்டுக்களுக்கும், பதிவுகளுக்கும் ஒப்புக்கொள்ளும் மனநிலையோடுதான் சமூக வலைதளங்களுக்குள்ளேயே இயங்க வேண்டியுள்ளது. அண்மையில் டிக்டாக்கில் வீடியோ மூலம் பாடி, நடனமாடிக்கொண்டிருந்த கலையரசன் என்பவர், சிலரின் வக்கிரமான விமர்சனங்களால் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி வீடியோ பதிவிட்டு, பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.

இப்படித்தான் தற்போது லண்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது யுவதியான எல்லா டவுன் சிண்ட்ரோம் என்கிற நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர். அவரை அவரது தந்தை பொதுவான வெளி உலகில் கொண்டாட்டங்கள் நிறைந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வார். அப்படித்தான் லண்டனின் நியூ ஸ்டேடியத்தில் நிகழ்ந்த கால்பந்தாட்ட போட்டியைக் காண எல்லாவை அவரது தந்தை மார்க்காம் அழைத்துச் சென்றார்.

அங்கு உற்சாக மிகுதியால் எல்லா நடனமாடியதை அவரது தந்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டபோது பலரும் இதனை கிண்டல் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இன்பாக்ஸில் குறுந்தகவல் அனுப்பிய மார்க்காம், தனது மகளின் குறைகளை தன்னிடம் சொல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குற்றவுணர்ச்சிக்குள்ளான பலரும் அவரிடம் மன்னிப்பு கேட்டதோடு, எல்லாவை பாராட்டி வருகின்றனர். அதன் பின்னர் பிரபலங்களும் எல்லாவை பாராட்டி வருகின்றனர்.

Tags : #HEARTWARMING #UK