மனசுக்குள்ள வருத்தப்பட்டுகிட்டு இருந்துருக்காரு.. சின்ன வயசுல இருந்தே நிறைவேறாத மகள்களின் ஆசை.. கல்யாணத்தில் அப்பா கொடுத்த சர்ப்ரைஸ்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 28, 2022 05:33 PM

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளின் ஆசையை நிறைவேற்ற ஹெலிகாப்டர் ஒன்றை வாடகை எடுத்து மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

dad rents helicopter to fulfill daughter\'s wish in Rajasthan

மகள்களுக்கு பிடித்த தந்தைமார்கள்:

எப்போதுமே தந்தைமார்களுக்கு தங்கள் மகள்கள் மேல் கூடுதல் பிரியம் உண்டு. பெரும்பாலும் மகள்களுக்கும் தாயை விட தந்தையே பிடித்தவராக இருப்பார். இதனாலையே சிறு வயதில் இருந்து தனக்கு ஏதாவது வேண்டும் என்றால் ரகசியமாக தந்தையிடம் கேட்டு வாங்கிக் கொள்வர். பொருளாதார சூழல் காரணமாக ஒருவேளை அதை வாங்கிக் கொண்டுக்க முடியாமல் போய்விட்டால் தந்தைமார்கள் நொந்து போய்விடுவார்கள். எப்படியாவது மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதே பெரும்பான்மையான தந்தைகளின் வாழ்க்கையாக இருக்கும்.

நன்றாக படிக்க வைத்த தந்தை:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் கேதர் என்பவர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இவர் தனது இரண்டு மகள்களையும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு படிக்க வைத்து மருத்துவராக்கியுள்ளார். மேலும், அவரது மகன் தற்போது சட்டம் பயின்று வருகிறார். 

dad rents helicopter to fulfill daughter's wish in Rajasthan

மகள்களின் ஆசை நிறைவேறவில்லை:

இவர்களது இரண்டு மகள்களான பூனம் கேதர், பிரியங்கா கேதர் ஆகியோருக்கு சிறுவயதில் இருந்தே ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என ஆசை இருந்துள்ளது. ஆனால், முன்பு சுரேஷ் கேதர் அவர்களின் பொருளாதார வசதி காரணமாக அவரின் மகள்களின் ஆசை நடக்கவில்லை.

வெங்கையா நாயுடு போட்ட ட்வீட்டால்.. ஒரே நாளில் ஃபேமஸ் ஆன இட்லிக்கடை.. சும்மா அள்ளுது கூட்டம்.. என்ன ஸ்பெஷல்?

dad rents helicopter to fulfill daughter's wish in Rajasthan

எதிர்பாராத நேரத்தில் ஆசையை பூர்த்தி செய்த தந்தை:

இந்நிலையில் சுரேஷ் தற்போது தன்னுடைய இரு மகள்களுக்கும்  ஒரே நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய மகள்களின் ஆசையையும் யாரும் எதிர்பாராத வகையில் நிறைவேற்றியுள்ளார். தன் மகள்களின் திருமணம் முடித்து மணமகன் வீட்டிற்கு செல்லும் போது தனது மகள்களை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி  பூனம் கேதர், பிரியங்கா கேதர் இருவரும் திருமணம் முடித்துவிட்டு தங்கள் கணவர் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.

யோவ்.. எனக்கு பசிக்குதுயா.. ஆசையா இருந்தேன், இப்படி சாப்பிட விடாம பண்ணிட்டீங்களே, நல்லா இருப்பீங்களா? கதறும் பெண்

dad rents helicopter to fulfill daughter's wish in Rajasthan

இவர்கள் இருவரும் செல்லும் நிகழ்வை அந்த இவர்கள் செல்வதை ஊரே ஒன்று கூடி வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் அவர்கள் செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Tags : #DAD RENTS HELICOPTER

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dad rents helicopter to fulfill daughter's wish in Rajasthan | India News.