'இந்தியாவின் மோசமான மொழி எது'?... 'எங்களை பாத்தா இளக்காரமா இருக்கா'... 'கொந்தளித்த நெட்டிசன்கள்'.... வாங்கி கட்டி கொண்ட கூகுள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால், அதற்காக வந்த பதில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கூகுள் தேடலில் What is the ugliest language in India (இந்தியாவின் மோசமான மொழி எது) எனத் தேடினால் அதற்குப் பதிலாகக் கன்னட மொழியைக் கூகுள் காட்டியிருந்தது. இந்த விவகாரம் கர்நாடகாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் எனக் காட்டியதற்குக் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இது தொடர்பாகக் கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
சமூகவலைத்தளங்களில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராகக் கன்னட மக்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் எனக் காட்டப்பட்டதற்குக் கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இதுகுறித்து கூகுள் நிறுவனம் விளக்கமளிக்கையில், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக நடந்து விடுகிறது.
இச்சம்பவத்திற்காகக் கூகுள் கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவித்துள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாகக் கூகுள் தேடு தளத்தில் வெளியான தவறான பதிவுகளையும் கூகுள் நீக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
