'இப்ப நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா?'.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க!”.. தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்.. சினிமாவுக்கு சென்ற தம்பதியால் அழகாக மாறிய ‘வாழ்க்கை’.. வைரல் பதிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பெண்ணை ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

அதன் பின் வேறொரு நல்ல வாழ்க்கை வாழும் பெண் ஒருவரின் தற்போதைய பதிவு வைரலாகி வருகிறது. கெண்ட் பகுதியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் Jess Paramor. அவருக்கு அப்போது 19 வயது. அந்த வயதில் கடும் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்த Jess சிகிச்சையில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து அப்பெண் ஒரு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். அப்போது பாலத்தில் சென்று குதிக்கத் தயாராகிவிட்ட Jess-ஐ அவ்வழியே சினிமாவுக்குச் சென்ற Tony witton-ம் அவரது மனைவியும் கவனித்துவிட்டனர். அத்துடன் பாசத்துடன் Jess-ன் கைகளை பிடித்துக்கொண்ட அவர்கள், Jess-ன் மனதை மாற்றியதுடன், அவசர உதவியை அழைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது 20 வயதாகும் Jess தனது வாழ்க்கையை அழகாக மாற்றிய அந்த அற்புத தம்பதியை தேடியுள்ளார்.
நண்பர்கள், சமூக வலைதளம் என பலவழிகளிலும் Jess அந்த தம்பதியைத் தேடிவந்த நிலையில், Jess-ஐ காப்பாற்றிய Tony witton-ஐ Jess கண்டுபிடித்துவிட்டதாகவும் அந்த தம்பதியிடம் தான் இப்போது நன்றாக இருப்பதாகவும், மருந்தக துறை தொடர்பாக படித்துவரும் செய்தியைக் கூறியதாகவும் இதைக் கேட்டு அவர்கள் சந்தோஷத்தொல் திக்குமுக்காடியதாகவும் குறிப்பிட்டுள்ளார் Jess. இதுபற்றி பேசிய Tony witton கெண்டில் தான் மேலாளராக பணிபுரிவதாகவும், தனக்கு Jess-இன் வயதில் 2 மகள்கள் இருப்பதாகவும், Jess-ஐ பார்த்ததும் தன்னுடைய அந்த தந்தை குணம் தான் அப்போது வெளிப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிர் விலை மதிப்பில்லாதது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
