'இரவோடு இரவாக 'HR' அனுப்பிய மெயில்'... 'காலையில் மெயிலை பார்த்த ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி'... பிரபல நிறுவனம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > வணிகம்சீனாவில் கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் கடுமையாக அச்சுறுத்தி ஒரு வழி செய்தது.
இந்த கொடிய தொற்றின் காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிப் போனதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அது மட்டுமில்லாமல், பல முன்னணி நிறுவனங்கள் தங்களது நிதி நெருக்கடியை குறைக்க, பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதனால், அவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
கொரோனாவின் பிடியில் இருந்து பல நாடுகள் தற்போது மெல்ல மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், இன்னும் கொரோனா தொற்றின் தீவிரம் சில நாடுகளில் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் ஆடை மற்றும் பேஷன் நிறுவனமான Debenhams, திங்கட்கிழமை திவாலானதாக அறிவித்த நிலையில், இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த 12,000 ஊழியர்களை இரவோடு இரவாக பணிநீக்கமும் செய்துள்ளது. நிறுவனத்தின் மெயிலை விடிந்ததுமே கண்ட ஊழியர்கள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
ஆன்லைன் வர்த்தக போட்டியில் நிலைத்து நிற்க முடியாமல் கடந்த சில ஆண்டுகளாகவே Debenhams கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில், கொரோனா தொற்றும் உருவாகி, ஊரடங்கும் போடப்பட்டதால் இந்த நிறுவனத்தின் வர்த்தகம் இன்னும் மோசமானது. இப்படி பெருமளவில் சரிவு உண்டானதால் பிரிட்டனிலுள்ள அனைத்து கடைகளையும் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரிட்டன் ஆன்லைன் பேஷன் குரூப்பான போஹோ (Boohoo), Debenhams நிறுவனத்தின் அறிவுசார் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளதால் கடைகள் திறக்கும் வரையில் மக்கள் Debenhams நிறுவனத்தின் ஆடைகளை போஹோ தளத்தில் ஆடைகளை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.
கடந்த சில நூற்றாண்டுகளாக வர்த்தகம் செய்து வரும் Debenhams, பிரிட்டன் நாட்டில் சுமார் 120 க்கும் மேற்பட்ட கடைகளை வைத்து வர்த்தகம் செய்து வந்தது. தொழிலில் ஏற்பட்ட தொடர் சரிவும், ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பாதிப்பும் தங்களின் மொத்த கடைகளையும் மூடும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால், இந்த அனைத்து கடைகளிலும் பணிபுரிந்து வந்த 12,000 ஊழியர்கள் தற்போது பணியிழந்து சிக்கலில் தவித்து வருகின்றனர்.
போஹோ நிறுவனம் ஏற்கனவே Debenhams நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தரவுகள் பிற அறிவுசார் சொத்துக்களை 55 மில்லியன் யூரோவிற்கு கைப்பற்றியது. இந்த தரவுகளை வைத்து அந்நிறுவனத்தை ஆன்லைன் சந்தைக்கு கொண்டு வந்து வர்த்தகத்தை விரிவாக்க போஹோ நிறுவனம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.