லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு இடையே தகனம் செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Jul 13, 2022 04:16 PM

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபேவின் உடல் நேற்று டோக்கியோவில் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.

Former Jappan PM Shinzo Abe funeral held at Tokyo

Also Read | இரவில் காதலியை சந்திக்கச் சென்ற இளைஞர்.. அடுத்தநாள் புதரில் கிடந்த சாக்குப்பை.. திண்டுக்கல் அருகே பயங்கரம்..!

ஷின்சோ அபே

ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள நாகதோ நகரில் 1954 ஆம் ஆண்டு பிறந்தார் ஷின்சோ அபே. பாரம்பரிய அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த இவர் 1977 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசியல் படிப்பை முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி முடித்தவுடன் 1979 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார் அபே.

1982ம் ஆண்டு பணியிலிருந்து விலகிய ஷின்சோ அபே, பின்னர் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். லிபெரல் டிமாக்ரட்டிக் கட்சியின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்த அபே, 2006 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Former Jappan PM Shinzo Abe funeral held at Tokyo

புகழ்பெற்ற தலைவர்

ஜப்பானின் மிக இளம் வயதில் பிரதமர் ஆனவர் என்ற பெருமையை கொண்ட அபே, ஜப்பானில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அபே அறிவித்தார். பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு இருந்த நிலையில் உடல்நிலை காரணமாக பதவியை துறப்பதாக அறிவித்தார் அபே.

இதனிடையே, ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டுவந்தார் அபே. கடந்த 8 ஆம் தேதி ஜப்பானின் நாரா பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் அபே. அப்போது மர்ம நபர் ஒருவர் சுட்டதில் அபே அங்கேயே சுருண்டு விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபே-வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே மரணமடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அஞ்சலி

இதனை தொடர்ந்து அவருடைய உடல் தலைநகர் டோக்கியாவில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஷின்சோ அபேவின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. டோக்கியாவில் உள்ள பவுத்த கோயிலில் அவரது உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அபேவின் மனைவிஅகி, பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அவரது உடல் டோக்கியோவின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

Former Jappan PM Shinzo Abe funeral held at Tokyo

அப்போது லட்சக்கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் நின்று அவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். அதன்பின்னர் அவருடைய உடல் பவுத்த வழக்கப்படி தகனம் செய்யப்பட்டிருக்கிறது. உலக அளவில் பிரபலமான தலைவராக கருதப்பட்ட ஷின்சோ அபே-வின் மறைவு மொத்த ஜப்பானையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read | காதல் கணவருடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்ட மனைவி.. நைட்ல ஏற்பட்ட தொந்தரவு.. திருமணமான ஒரு மாதத்தில் மனைவிக்கு நேர்ந்த சோகம்..!

Tags : #JAPPAN PM #JAPPAN PM SHINZO ABE #JAPPAN PM SHINZO ABE FUNERAL #TOKYO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Former Jappan PM Shinzo Abe funeral held at Tokyo | World News.