'பஸ்ஸுக்கு காசு இல்ல'... 'பயிற்சி மையத்துக்கு செல்ல... லிஃப்ட் கொடுத்த லாரி டிரைவர்களுக்கு... சர்ப்ரைஸ் கொடுத்த மீராபாய் சானு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, சில மணல் லாரி ஓட்டுநர்களை அழைத்து உபசரித்த சம்பவத்தின் பின்னணியில் நெகிழவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்றுதந்தவர் மீராபாய் சானு. பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர், மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மீராபாய் சானு. அங்கிருந்து இம்பாலில் உள்ள பயிற்சி மையத்திற்கு வருவதற்கு போதிய அளவு பணம் இல்லாததால், அவ்வழியாக வரும் மணல் லாரிகளில் லிஃப்ட் கேட்டு பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதை அடுத்து, தனக்கு உதவிய சுமார் 150 லாரி ஓட்டுநர்களை நேரில் அழைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். அத்தோடு அவர்களுக்கு புத்தாடைகள் வழங்கி, மதிய உணவும் அளித்து உபசரித்தார்.

மற்ற செய்திகள்
