மரம் நடலாம்னு குழி தோண்ட போனவருக்கு காத்திருந்த ஷாக்.. போட்டோவை இணையத்துல ஷேர் பண்ணப்போ தான் உண்மையே தெரியவந்திருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Sep 20, 2022 12:31 PM

பாலஸ்தீனில் மரம் நடச் சென்ற விவசாயி ஒருவர் பழங்கால மொசைக் தரைகளை கண்டுபிடித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

farmer discovered Byzantine floor mosaic while plant tree

Also Read | இன்ஸ்டாகிராமில் இருந்த பிழை.. சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு கிடைச்ச தாறுமாறான பரிசுத்தொகை..!

மரம்

பாலஸ்தீனில் இயங்கிவரும் புரேஜ் அகதிகள் முகாமில் வசித்துவருகிறார் சல்மான் அல்-நபாஹின். இஸ்ரேல் எல்லையில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த அகதிகள் முகாம் அருகே விவசாய நிலங்கள் இருக்கின்றன. இதில் மரங்களை நட்டு வளர்த்துவருகிறார் சல்மான். ஆனால் சமீப காலங்களில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவர் வைத்த மரங்கள் வேர்விடாமல் இருப்பதை அறிந்த சல்மான், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆலிவ் மரம் ஒன்றை நட சல்மான் முடிவு செய்திருக்கிறார்.

farmer discovered Byzantine floor mosaic while plant tree

சத்தம்

அப்போது தனது மகனை குழி வெட்டும்படி சொல்லியிருக்கிறார் சல்மான். குழி தோண்டப்படும் வேளையில் வித்தியாசமான சத்தம் எழுந்திருக்கிறது. இதனால் ஆச்சர்யப்பட்டுப்போன சல்மான் கவனமாக அருகில் இருந்த இடத்தை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது தான் பூமிக்கு அடியே வித்தியாசமான தரைப்பரப்பு இருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் அந்த பகுதி முழுவதிலும் இதுபோன்ற தரைப்பரப்பு இருப்பதை அறிந்து திகைப்படைந்திருக்கிறார் சல்மான்.

மொசைக் தரைகள்

பின்னர் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இதுகுறித்து தேடியுள்ளார். அப்போதுதான் அது பைஸாந்திய காலத்து மொசைக் தரைகள் என்பது அவருக்கு தெரியவந்திருக்கிறது. இந்த தரையில் பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக பொறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சல்மான்,"நான் இதுபற்றி இணையத்தில் தேடினேன். அது பைஸாந்திய காலத்தைச் சேர்ந்த மொசைக் என்று நாங்கள் அறிந்தோம். இது புதையலைவிட மேலானது. இது எனக்கு மட்டும் அல்லது ஒவ்வொரு பாலஸ்தீன குடிமகனுக்கும் சொந்தமானது" என்றார்.

farmer discovered Byzantine floor mosaic while plant tree

பைஸாந்திய காலத்தில் மக்களின் வாழ்க்கை முறை அப்போது வாழ்ந்த விலங்குகள் மற்றும் பறவைகளை பற்றி அறிய இந்த தளம் உதவும் என பாலஸ்தீனிய சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. "இப்பகுதியில் தொல்லியல் கண்டுபிடிப்புகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும் பல ரகசியங்கள் மற்றும் பழங்கால நாகரீகங்கள் குறித்து அறிய நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | இறுதி கணத்தில் அம்மாவின் சவப்பெட்டி மீது அரசர் சார்லஸ் வைத்த கடிதம்.. அதுல இருந்ததை படிச்சிட்டு கண்கலங்கிய பொதுமக்கள்..!

Tags : #FARMER #DISCOVER #BYZANTINE FLOOR MOSAIC #PLANT TREE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Farmer discovered Byzantine floor mosaic while plant tree | World News.