அடேங்கப்பா...! இது ஒரு வருஷத்தோட சம்பளம் இல்லையா...? ஒரு மாசத்துக்கே இவ்வளவு சம்பளமா...! - ராணியோட வீட்டு வேலையாளுக்கு வழங்கப்படும் 'அதிர' வைக்கும் சம்பளம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து இளவரசி வசிக்கும் வீட்டின் துப்புரவு பணியாளர் பதவிக்கு ஆரம்ப சம்பளமே அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் இளவரசி வசிக்கும் 'வின்ஸ்டர் காஸ்ட்டில்' என்ற மிக பிரமாண்ட அரண்மனைக்கு துப்புரவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்க்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு ஆரம்ப சம்பளமே சுமார் ரூ 18.5 லட்சம் எனவும், பணியில் சேரும் நபருக்கு இளவரசி வசிக்கும் அரண்மனையின் அருகிலேயே வசிக்க தனி பங்களாவும் ஏற்பாடு செய்து தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு 33 நாட்கள் விடுமுறை, ஓய்வூதியம், உணவுப்படி, போக்குவரத்து செலவு போன்ற அனைத்தும் வழங்கவும் செய்கின்றனர். வேலைக்கு விண்ணப்பிக்கும் பணியாளர் கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் கணிதம் தெரிந்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு முதல் கட்டமாக 13 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்பின்னே தான் அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக பணியமர்த்தப் படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பணி நாட்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே என தெரிவித்துள்ளனர்.
மேலும், அரண்மனைப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம் ஆகிய வசதிகளை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சலுகையும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
