குடும்பம் நடத்த இந்த ‘சம்பளம்’ பத்தல.. பதவியை ‘ராஜினாமா’ செய்ய போகிறாரா இங்கிலாந்து ‘பிரதமர்’..?
முகப்பு > செய்திகள் > உலகம்குடும்பத்தை நடத்த ஊதியம் போதவில்லை என இங்கிலாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக பிரபல ஊடகம் Daily Mirror செய்தி வெளியிட்டுள்ளது. பெயரை வெளியிட விரும்பாத ஆளும் கட்சி எம்.பி.க்கள் இரண்டு பேர் அளித்த தகவலின் பேரில் இந்த செய்தி வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 402 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரம்) ஊதியமாக பெற்று வருகிறார். போரிஸ் ஜான்சன் பிரதமராவதற்கு முன்பு, நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம் 23,000 பவுண்டுகள் (சுமார் ரூ.21 லட்சத்து 91 ஆயிரம்) ஊதியமாக பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போரிஸ் ஜான்சனுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு தேவையான செலவுகளை போரிஸ் ஜான்சன் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு வரை போரிஸ் ஜான்சன், 2 லட்சத்து 75 ஆயிரம் பவுண்டகளை (சுமார் ரூ.2 கோடியே 61 லட்சத்து 93 ஆயிரம்) ஆண்டு வருமானமாக பெற்று வந்துள்ளார். மாதம் இரண்டு மேடைப்பேச்சுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுகளை (சுமார் ரூ.1 கோடியே 52 லட்சத்து 44 ஆயிரம்) வருவாயாக ஈட்டினார். தற்போது பெற்று வரும் ஊதியம் போதவில்லை என்பதால் அடுத்த ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பலரும் இது உண்மையில்லை என தெரிவித்து வருகின்றனர்.