'நம்ம கைய வச்சே... நம்ம கண்ண குத்த பாக்குறாங்க!'.. கோலி எதிர்பார்க்காத ட்விஸ்ட்!.. உஷாரன ஆஸ்திரேலிய அணி... இந்தியாவுக்கு கொடுத்த ஷாக்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Oct 29, 2020 08:25 PM

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி விவரம் தற்போது வெளியாகி உள்ளது. 

australia t20 odi squad players in form using ipl 2020 kohli bcci

ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் இடையில் நடக்க உள்ளது.

இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அதேபோல் இன்னொரு பக்கம் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.

இதனால் அணிக்குள் சைனி, சிராஜ் ஆகியோர் உள்ளே வந்துள்ளனர். ஐபிஎல் தொடரில் வீரர்கள் இருக்கும் பார்மை பொறுத்து இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இதே ஐபிஎல் மூலம் தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கும் கோலிக்கும் செக் வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்நாட்டு ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி 20 அணி விவரம் தற்போது வெளியாகி உள்ளது. ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் ஹசல்வுட், கேமரூன் கிரீன், மொய்சஸ் ஹென்ரிஸ், சியான் அபாட், அஷ்டன் அகார், மார்ன்ஸ், கிளென் மேக்ஸ்வெல் கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

மேலும், மிட்சல் ஸ்டார்க், மார்க்ஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் சாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பெரும்பாலான வீரர்கள் இந்தியாவில் ஐபிஎல் தொடரில் ஆடிய வீரர்கள் ஆவர். ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் ஹசல்வுட், மார்க்ஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் வீரர்கள்.  

லாக்டவுன் காரணமாக பார்மை இழந்து தவித்த இந்த வீரர்கள் எல்லோரும் தற்போது ஐபிஎல் மூலம் பார்மிற்கு திரும்பி உள்ளனர். அதிலும் டேவிட் வார்னர், ஹசல்வுட், கம்மிஸ், பின்ச், ஸ்டோனிஸ் எல்லோரும் பார்மிற்கு திரும்பி உள்ளனர். இது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு சிக்கலாக மாறியுள்ளது. 

ஐபிஎல் தொடரில் கலந்து கொண்ட பல இந்திய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் நன்றாக ஆடும் ரோஹித் சர்மா இந்த முறை தொடரில் கலந்து கொள்ளவில்லை. அப்படி இருக்கும் கோலிக்கு இது பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவை எப்படி எதிர்கொள்ளும் என்று கேள்வி எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australia t20 odi squad players in form using ipl 2020 kohli bcci | Sports News.