VIRAL VIDEO : என்ன நடக்குதுன்னு தெரியாம தன்னோட 'வேலை'ய பார்த்த நியூஸ் 'ரிப்போர்ட்டர்'... பின்னாடி நின்னு சுட்டி 'பையன்' செய்த குறும்பு 'வேலை'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 07, 2020 07:05 PM

இங்கிலாந்தின் சவுத் ஷீல்ட்ஸ் நகரின் கடற்கரை ஒன்றில் இருந்து செய்தி தொகுப்பாளர் ஒருவர், அங்குள்ள சூழ்நிலையை நேரலையில் விவரித்து கொண்டிருந்த போது, பின்னால் நின்ற சிறுவன் ஒருவன் செய்த குறும்பு செயல் வைரலாகி வருகிறது.

england news anchor upstaged by boy dancing behind her

லியோ என்ற அந்த சிறுவன், அந்த செய்தி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருந்த போது சரியாக வீடியோ ப்ரேமிற்குள் நின்று கொண்டு, தனது டி ஷர்டை மடக்கி உயர்த்தி வைத்துக் கொண்டு அழகாக சில நடன அசைவுகளை மிக குறும்பாக செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இதுகுறித்து எதுவும் அறியாமல் செய்தி தொகுப்பாளரான அந்த பெண், தனது பணியை கவனித்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான அந்த வீடியோவை செய்தி தொகுப்பாளரான ஜென் பார்ட்ரம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, சிறிது நேரத்திலே சிறுவனின் குறும்பு டான்ஸ் அதிகம் வைரலானது. நெட்டிசன்கள் பலர் தங்கள் தொடர்ந்து பல நிமிடங்களாக அந்த வீடியோவை கண்டு சிறிது கொண்டே இருந்ததாக கமெண்ட் செய்தனர். மேலும், அந்த வீடியோவில் பாடல் ஒன்றை இணைத்து ஜாலி வீடியோவாக ஜென் பார்ட்ரம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. England news anchor upstaged by boy dancing behind her | World News.