மரண பயத்த காட்டிட்டான்... ஒரு 'நிமிஷம்' அரண்டே போய்ட்டோம்... மனதை உறையச் செய்யும் 'த்ரில்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்உயரமான மலை உச்சி ஒன்றின் விளிம்பில் நின்று கொண்டு இளைஞர் ஒருவர் பேக்ஃப்ளிப் செய்யும் இதயத்தை உரைய வைக்கும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

15 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் மலை உச்சியின் விளிம்பில் நின்று கொண்டு திடீரென பேக்ஃப்ளிப் ஒன்றை அடிக்கிறார். எந்தவித ஆபத்தும் இன்றி சாகசத்தை செய்து முடித்த இளைஞர் இறுதியில் தம்ஃப்ஸ் அப் காட்டி முடிக்கிறார்.
பார்ப்பவர்கள் இதயத்தை ஒரு நிமிடம் உறைய செய்யும் இளைஞரின் கடினமான இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயிரை பணயம் வைக்கும் இந்த முயற்சியில் சிறு தவறு ஏற்பட்டால் என்னவாகும், இது ஒரு முட்டாள்தனமான சாகசம் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் சிலர் அந்த இளைஞருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். வெற்றிகரமாக இந்த பேக்ஃப்ளிப் செய்ததால் அதில் முட்டாள்தனமாக எதுவும் தெரியவில்லை என்கின்றனர். இன்னும் சிலர், கிராபிக்ஸ் செய்து இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இப்படி பல்வேறு கடுத்துக்கள் இந்த வீடியோவுக்கு நிலவி வந்தாலும் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
