'வரப்போற டி-20 மேட்ச்ல...' நடராஜன் விளையாடுவாரான்னு ஒரு 'சின்ன' டவுட் இருக்கு...! - வெளியான பரபரப்பு தகவல்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சளாரான நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் சிறப்பாக விளையாடி தமிழகத்திற்கு பெருமை சேர்ந்தத்துடன் இந்தியளவில் அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த கிரிக்கெட் போட்டிகளில் நடராஜன் தோள் பட்டை மற்றும் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்க சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயம் காரணமாக இப்போது நடராஜன் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற் தகுதியை உறுதி செய்ய பயிற்சியும், காயம் குணமடைவதற்கான மருத்துவ ஆலோசனையும் பெற்று வருகிறார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மட்டுமல்லாது மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கரவரத்தியும் இந்திய டி-20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடுவதற்கு முன்பு இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனையை மேற்கொண்ட பின்னரே அணியில் உறுதிப்படுத்த இருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையில் உடற்தகுதி சோதனையில் வருண் சக்கரவர்த்தி தோல்வியடைந்த காரணத்தால், அவருக்கு பதிலாக ராகுல் சஹார் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து இந்தியா முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கும் நிலையில் நடராஜனும், வருண் சக்கரவர்த்தியும் காயம் சரியாகி அணியில் இடம் பிடிப்பார்களா மிகப்பெரிய கேள்வியை கிளப்பியுள்ளது எனலாம்.