"நான்-னு நெனச்சு என் பையன".. எலான் மஸ்க் மகனை பின்தொடர்ந்த மர்ம கார்??.. அவரே பகிர்ந்த வீடியோவால் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | யாரை முதல்ல போட்டோ எடுக்குறது?.. மாப்பிள்ளை - பெண் வீட்டார் இடையே வந்த தகராறு.. களேபரமான கல்யாண வீடு..!
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க். இதனிடையே, வாசனை திரவிய தொழிலும் அவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எலான் மஸ்க்கின் மகன் lil X சென்ற காரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததாகவும், தான் அந்த காரில் இருந்ததாக நினைத்துக்கொண்டு அந்நபர் இப்படி செய்திருப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருக்கிறார். முகமூடியுடன் இருக்கும் அந்நபரின் வீடியோவையும் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், அந்த நபர் அல்லது காரை யாருக்கேனும் தெரியுமா? எனவும் கேள்வியெழுப்பியிருக்கிறார் அவர்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"நேற்றிரவு, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் lil X சென்ற காரை ஒருவன் பின்தொடர்ந்தான் (அது நான்தான் என்று நினைத்து), பின்னர் காரை நகர்த்தவிடாமல் தடுத்தான். எனது குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஸ்வீனி மற்றும் அமைப்புகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில், எலான் மஸ்க்கின் பிரைவேட் ஜெட் இருக்கும் இடங்களை வெளியிட்டு வந்த ஜாக் ஸ்வீனி என்பவரின் பக்கத்தை ட்விட்டர் முடக்கியது. மேலும், ஜாக்கின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டு உள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தன்னுடைய மகன் சென்ற காரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததாக கூறியிருப்பது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Anyone recognize this person or car? pic.twitter.com/2U0Eyx7iwl
— Elon Musk (@elonmusk) December 15, 2022
Also Read | "தம்பி நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்".. எலான் மஸ்க்குக்கே Tough கொடுத்த மாணவர்.. மஸ்க்கின் அதிரடி..!

மற்ற செய்திகள்
