எலான் மஸ்கின் வேற மாறி ஹாலோவீன் காஸ்ட்யூம்.. ஆனாலும் விலையை கேட்டா தான் திக்குன்னு இருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Nov 02, 2022 10:23 AM

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் ஹாலோவீன் உடை குறித்து மக்கள் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.

Elon Musk Attends Halloween Party Costume pic goes viral

Also Read | ட்விட்டர் Blue Tick -க்கான கட்டணத்தை உறுதி செய்த எலான் மஸ்க்.. அடேங்கப்பா இவ்வளவு சலுகைகளா..?

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். சிறுவயது முதலே அறிவியல் பாடங்களில் தீராத காதலுடன் இருந்த மஸ்க், படிப்படியாக தனது வாழ்க்கையில் முன்னேறியவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த விஷயங்களில் ஆர்வம்கொண்ட இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி, உலக மக்களுக்கு குறைவான கட்டணத்தில் இணைய சேவை வழங்கிடும் ஸ்டார்லிங் திட்டம் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பல்வேறு முக்கிய திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல, இவருடைய டெஸ்லா நிறுவனம் உலகின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்குகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Elon Musk Attends Halloween Party Costume pic goes viral

சமீபத்தில் வாசனை திரவிய தொழிலில் இறங்கினார் மஸ்க். அதனை தொடர்ந்து பல நாள் நீடித்துவந்த ட்விட்டர் டீலையும் முடித்து நிறுவனத்தை கைப்பற்றினார். எப்போதும், வேடிக்கையான ட்வீட்கள் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் மஸ்க் தற்போது தன்னுடைய ஹாலோவீன் ஆடை மூலம் மக்களிடையே பேசுபொருளாகி உள்ளார்.

அமெரிக்க மாடலான Heidi Klum ஏற்பாடு செய்திருந்த ஹாலோவீன் பார்ட்டியில் மஸ்க் லெதரால் செய்யப்பட்ட சாமுராய் உடையை அணிந்திருந்தார். இந்த பார்ட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றிருக்கிறது. இந்த ஹாலோவீன் பார்ட்டியில் மஸ்கின் தாய் மேயி மஸ்க்கும் கலந்துகொண்டிருக்கிறார். தன்னுடைய காஸ்ட்யூம் புகைப்படங்களை மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பகிர, கொஞ்ச நேரத்திலேயே அவை வைரலாகிவிட்டன.

Elon Musk Attends Halloween Party Costume pic goes viral

இந்நிலையில், ஹாலோவீன் பார்ட்டியில் மஸ்க் அணிந்திருந்த உடையின் விலை 7,500 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 6.19 லட்ச ரூபாய்) என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நெட்டிசன்கள் பரபரப்பாக பேசிவருகின்றனர்.

Also Read | ‘சிரிக்காதீங்க மைனா’.. ‘பாடி லாங்வேஜ் பண்ணாதீங்க மகேஸ்வரி’.. ‘என்ன பண்ணுவீங்க விக்ரம்.?’.. TV Task-ல் வெடிச்சுது அடுத்த சண்டை.. bigg boss 6 tamil

Tags : #ELON MUSK #HALLOWEEN PARTY #ELON MUSK ATTENDS HALLOWEEN PARTY #HALLOWEEN DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk Attends Halloween Party Costume pic goes viral | World News.