உலக பணக்காரர்களின் பட்டியல்.. எலான் மஸ்க்குக்கே கொஞ்ச நேரத்துக்கு TOUGH கொடுத்த தொழிலதிபர்.. முழுவிபரம்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த எலான் மஸ்க், சிறிதுநேர இடைவெளியில் இரண்டாம் இடத்துக்கு சென்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே மஸ்க் மீண்டும் முதலிடத்திற்கு திரும்பியதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.

Also Read | காயத்துடன் களத்தில் போராடிய ரோஹித்.. கணவரை பற்றி உருக்கமாக மனைவி ரித்திகா பகிர்ந்த பதிவு!!..
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார்.
முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.
இந்நிலையில், நேற்று உலக பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்த எலான் மஸ்க் சிறிதுநேர இடைவெளியில் இரண்டாம் இடத்திற்கு சென்றதாகவும் பின்னர் மீண்டும் முதலிடம் பிடித்ததாகவும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சொகுசு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான LVMH ன் தலைவர் பெர்னாட் அர்னால்ட் சிறிதுநேரத்திற்கு முதலிடத்தில் இருந்ததாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 185.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் அர்னால்டின் சொத்து மதிப்பு 185.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் தலைவர் ஜெஃப் பெஸோஸ் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். அப்போது இந்த இடத்தை மஸ்க் பிடித்தார். அதுமுதல் முதலிடத்தில் நீடித்துவந்த மஸ்க், நேற்று சிறிதுகால இடைவெளியில் இரண்டாம் இடத்திற்கு சென்று மீண்டும் முதலிடத்திற்கு திரும்பியது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | கையில காயத்தோட.. உள்ள வந்து கெத்து காட்டிய ரோஹித்.. "இப்டி ஒரு ரெக்கார்ட் வேற மனுஷன் பண்ணிட்டு போய்ட்டாரா?"

மற்ற செய்திகள்
