ட்விட்டர் ப்ளூடிக் விவகாரம்.. எலான் மஸ்க்கிற்கு கங்கனா ரனாவத் கொடுத்த ஐடியா.. இது புதுசா இருக்கே..!
முகப்பு > செய்திகள் > உலகம்ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியிருக்கும் நிலையில், Verified Badge கணக்குகளுக்கு கட்டணம் விதிக்கப்படும் என அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் புது யோசனையை எலான் மஸ்க்கிடம் முன்வைத்திருக்கிறார்.

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியிருக்கிறார் எலான் மஸ்க்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. இதனிடையே, ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு மாதம் 8 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என மஸ்க் அறிவித்திருந்தார். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஆதார் கார்டின் மூலமாக ப்ளூடிக் வழங்கலாம் என எலான் மஸ்க்கிற்கு யோசனை கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர்,"ட்விட்டர் தற்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாகும். இது அறிவுசார், கருத்தியல் ரீதியாக உந்துசக்தி கொண்ட தளமாக இருக்கிறது. ஆனால், ட்விட்டரில் ப்ளூ டிக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ப்ளூ டிக் இல்லாத நபர்கள் முறையான ஆவணங்கள் இல்லாத நபர்களா? உதாரணமாக, எனது அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு நான் ப்ளூ டிக் பெற்ற நபராக இருக்கிறேன். ஆனால், எனது அப்பாவிற்கு ப்ளூ டிக் கிடைக்கவில்லை. அப்படியென்றால் அவர் முறையான ஆவணங்கள் இல்லாத நபரா? இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க ஆதார் கார்டு பெற்றவர்களுக்கு ப்ளூ டிக் தரலாமே" எனக் குறிப்பிட்டுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மற்ற செய்திகள்
