வேலையே போனாலும் ட்விட்டர் CEO-க்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Oct 28, 2022 03:41 PM

ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றிய நிலையில் அதன் CEO பராக் அகர்வாலை மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில். அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு கோடிக்கணக்கான தொகையை ட்விட்டர் நிறுவனம் கொடுக்க வேண்டியிருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Twitter CEO Parag Agrawal will get 42 million USD if he fired

Also Read | நம்ம எல்லாம் மிடில் கிளாஸ்".. 90-ஸ் கிட்ஸ்களின் ஜாலியான அனுபவங்களை புட்டுப்புட்டு வைத்த இளம்பெண்.. IAS அதிகாரி பகிர்ந்த சூப்பர் வீடியோ..!

  அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

Twitter CEO Parag Agrawal will get 42 million USD if he fired

அதன்பின்னர் போலி கணக்குகள் குறித்த விபரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி அந்த டீலை நிரந்தரமாக கைவிட்டார் மஸ்க். இதனை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் சில வாரங்களில் துவங்க இருந்தது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே ஆகியோரையும் மஸ்க் பணிநீக்கம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டர் CEO பணிநீக்கம் செய்யப்பட்டாலும் அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் CEO-வாக இந்தியாவை சேர்ந்த அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், Equilar எனும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி பதவியேற்று ஒரு வருடத்திற்குள் பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Twitter CEO Parag Agrawal will get 42 million USD if he fired

ட்விட்டர் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டில் ஊழியராக இணைந்தார் பராக் அகர்வால். அப்போது ட்விட்டரில் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 1000 மட்டுமே. மும்பை ஐஐடி மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பராக் அகர்வால் 2017ஆம் ஆண்டில் ட்விட்டர் சிடிஓவாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ட்விட்டர் CEO பதவியில் இருந்து ஜாக் டார்சி விலகிய நிலையில் அகர்வால் புதிய CEO -ஆக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Also Read | உலகின் அதிவேக வெர்டிகல் ரோலர் கோஸ்டர்.. கின்னஸ் சாதனை படைத்த துபாய்.. அசர வைக்கும் வீடியோ..!

Tags : #TWITTER CEO #PARAG AGRAWAL #TWITTER CEO PARAG AGRAWAL #ELON MUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Twitter CEO Parag Agrawal will get 42 million USD if he fired | Business News.