"நான் கொலை செய்யப்படலாம்.. ரிஸ்க் அதிகமா இருக்கு".. அதிர வைத்த எலான் மஸ்க்.. பரபர பின்னணி.!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க் தான் படுகொலை செய்யப்படலாம் என தெரிவித்திருப்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார்.
முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.
பல்வேறு அதிரடி கருத்துக்களுக்கு பெயர்போன மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸில் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். அப்போது, தான் படுகொலை செய்யப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அதனால் திறந்த வெளி கார்களில் செல்வதை தவிர்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில்,"வெளிப்படையாகச் சொல்வதென்றால், எனக்கு ஏதாவது கெட்டது நடக்கும் அல்லது உண்மையில் நான் சுடப்படலாம். நீங்கள் விரும்பினால் ஒருவரைக் கொல்வது அவ்வளவு கடினம் அல்ல. இருப்பினும் யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய சூழ்நிலையை பார்த்து விதி புன்னகைக்கிறது. ஆனால், நிச்சயமாக சில ஆபத்து இருக்கிறது. அதனாலேயே திறந்தவெளி கார் அணிவகுப்புகளில் கலந்துகொள்வதில்லை' என்றார்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த அந்த பேச்சில் கருத்து சுதந்திரத்தின் முக்கியத்தும் குறித்தும் மஸ்க் பேசியிருக்கிறார். உலகின் டாப் பணக்காரரான எலான் மஸ்க், தான் சுடப்படலாம் என பொதுவெளியில் தெரிவித்திருப்பது உலக அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
Elon Musk Says His Assassination Risk is “Quite Significant”: “Frankly the risk of something bad happening to me or literally being shot is quite significant. I am definitely not going to be doing any open-air car parades.”
Source: https://t.co/thJ94gap7b pic.twitter.com/P4vQ2gTQZz
— Wittgenstein (@backtolife_2023) December 4, 2022
Also Read | "சம்பளம் ₹1.03 கோடி.. ஆனா வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க".. கோர்ட்டுக்கு போன ஊழியர்.. யாரு சாமி இவரு..?