ட்விட்டர் BLUE TICK -க்கான கட்டணத்தை உறுதி செய்த எலான் மஸ்க்.. அடேங்கப்பா இவ்வளவு சலுகைகளா..?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Nov 02, 2022 12:53 AM

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பல பரபரப்பான தகவல்கள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், ட்விட்டரில் Blue Tick ஐ பெற கட்டணம் செலுத்தவேண்டும் என மஸ்க் அறிவித்திருக்கிறார்.

Elon Musk has confirmed charges for the verified Badge

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 265 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. அந்த வகையில் ட்விட்டரில் verified badge எனப்படும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு பயனர்கள் பணம் செலுத்தவேண்டும் என தகவல்கள் வெளியானது. இது இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தியுள்ளார் மஸ்க். இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், verified badge-க்கு மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த  verified badge வைத்திருப்பவர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். அதன்படி, இந்த பேட்ஜை வைத்திருப்பவர்கள் ரிப்ளைகள், மென்ஷன், தேடல் ஆகியவற்றில் முன்னுரிமை பெறுவார்கள் எனவும் நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பதிவிட முடியும் எனவும் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

அதேபோல, விளம்பரங்களும் பாதியாக குறைக்கப்படும் எனவும் இது ஸ்பேம்/ஸ்கேமை தோற்கடிக்க அவசியம் எனவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், "எங்களுடன் பணியாற்ற விரும்பும் வெளியீட்டாளர்களுக்கான பேவால் பைபாஸ் வசதி அளிக்கப்படும்" என மஸ்க் அந்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : #ELON MUSK #TWITTER #BLUE TICK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk has confirmed charges for the verified Badge | Business News.