VIDEO: 'விலையுயர்ந்த கார்ல கூடு கட்டிய பறவை...' அதானாலென்ன இப்போ...! 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க...? துபாய் இளவரசரின் இரக்க குணம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Aug 06, 2020 10:08 AM

பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்காக தனது விலை உயர்ந்த காரை கொடுத்த துபாய் இளவரசருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

dubai prince sheikh hamdan expensive car to live bird nest

துபாயின் பட்டத்து இளவரசராக பதவி வகிப்பவர் ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் ஆவார். இவருக்கு எப்போதும் பறவைகள்,  விலங்கினங்கள் மீதும் அலாதியான அன்பு வைத்திருப்பவர். இதற்காகவே தனி மிருககாட்சி சாலையில் பல்வேறு வகையான விலங்குகளை வளர்த்து வருகிறார்.

மேலும்,  இவர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு  உயிரினங்களுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியிடங்களுக்கு செல்வதை இளவரசர் தவிர்த்து வந்தார். ஆகையால் அவரது வாகனங்கள் வெகுநாட்களாக பயன்படுத்தாமல் காணப்பட்டது.

தற்போது வெகுவாக பயன்படுத்தி வரும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனத்தின் முகப்பு பகுதியில் சிறு பறவை ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது.

பின்னர் அங்கேயே அடைகாக்க ஆரம்பித்தது. இதனை கண்ட இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டார்.

மேலும் கூட்டை கலைக்கும் வண்ணம் யாரும் அந்த வாகனத்தை சுற்றி செல்ல கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு வண்ணத்திலான டேப்பை நாற்புறமும் சுற்றி வைத்துள்ளார்.

பறவை தனது முட்டைகளை இன்னும் அதில் அடைகாத்து வருகிறது. ஒரு சிறு பறவைக்காக தனது காரையே அளித்த இளவரசரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரைலாகி வருகிறது.

அவரின் இரக்க குணத்தை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai prince sheikh hamdan expensive car to live bird nest | World News.