'வணக்கம்' சொல்றது எப்படின்னு க்ளாஸ் எடுக்க இதான் சரியான டைம்...! ‘கொரோனா வைரஸ் பயத்தினால் கைக்குலுக்குவதை தவிர்த்து வணக்கம் தெரிவித்த இளவரசர்...’ வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து இளவரசர் கொரோனா வைரஸ் அச்சத்தால், கைக்குலுக்குவதை தவிர்த்து வணக்கம் தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது
சீனாவிலிருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் 125 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை சுமார் 4749 பேர் இறந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1,29,605 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் சீனாவே முதலிடம், மேலும்
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.
அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேவாலயங்களில் கூட்டமாக சேர்வதை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். மேலும் அடிக்கடி கைகழுவுமாறும், தொட்டு பேசுவதை தவிர்க்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று லண்டன் பல்லேடியத்தில் நடைபெற்ற வருடாந்தர இளவரசர் அறக்கட்டளை விருதுகளில் பங்கேற்ற இளவரசர் சார்லஸ் தனக்கு கை குலுக்க வந்தவருக்கு, கைக்கொடுக்காமல் இரு கைகூப்பி வணக்கம் தெரிவித்துள்ளார்.
இளவரசர் சார்லஸ் இந்திய முறைப்படி வணக்கம் சொல்லி வாழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகியது. மேலும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், “நமஸ்தே. பாருங்கள், இந்தியர்களான நாங்கள் இதை பல ஆண்டுகளுக்கு முன்பு உலகுக்குச் செய்யச் சொன்னோம். இப்போது ‘ஒரு நமஸ்தேவை எப்படி சரியாகச் செய்வது என்ற வகுப்பிற்கான நேரம்.” என ட்வீட் செய்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Namaste 🙏🏻 🙏🏻
See we Indians told to do this to world many many years ago. Now just a class on ‘how to do namaste properly’. #CoronaVirus pic.twitter.com/P1bToirPin
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 12, 2020