பயணம் செல்வதற்கு பல நாடுகள் 'இந்த தடுப்பூசிய' தான் அக்செப்ட் பண்ணியிருக்காங்க...! - ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகநாடுகள் பலவும் ஏற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசியாக ஆஸ்ட்ரா ஜெனிகாவின் ஊசி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒன்றாக இணைந்து போராடும் காலத்தை கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
பல நாடுகளும் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடித்துள்ள நிலையில் அந்தந்த நாட்டு மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். இந்தியாவிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் அதிகமாக போடப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு ஆர்வத்துடன் போட்டாலும் இன்னும் 67% சதவீதம் மக்கள் ஒரு டோஸ் கூட போடாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து நாடுகளும் தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே தங்கள் நாடுகளுள் நுழைய அனுமதிக்கிறது. இதில் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசியாக ஆஸ்ட்ரா ஜெனிகாவே முன்னிலை வகிக்கிறது. இது இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தயாரித்துள்ள தடுப்பூசியாகும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை 74 சதவீத சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. . அனைத்து வகை தடுப்பூசிகளும் கடல்கடந்த நாடுகளுக்குச் செல்ல ஏற்கப்படுவதில்லை.
முதலில் ஐரோப்பிய யூனியன்கள், இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிஷீல்ட்டை ஏற்க மறுத்தது. அதற்கு இந்தியாவோ வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தப் போவதாக எச்சரித்ததையடுத்து 16 நாடுகள் கோவிஷீல்ட்டுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.