ஏம்மா இங்க நிக்குற..? பரிதாபமாக நின்ற மாற்றுத்திறனாளி பெண் கொடுத்த மனு.. அடுத்த 2 மணிநேரத்தில் நடந்த அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு ஆய்வு பணிக்கு சென்றபோது மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக பணிநியமனம் வழங்கி முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார்.

முதல்வர் பழனிசாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் 328.40 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், மேலும் முடைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகே முதல்வரின் கார் வந்துகொண்டு இருந்தது. அப்போது கையில் மனுவுடன் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் மாரீஸ்வரி (28) பரிதாபமாக நின்றுகொண்டு இருந்தார். இதைப் பார்த்த முதல்வர் காரை நிறுத்தி மாரீஸ்வரியிடம் விசாரித்தார்.
அப்போது மாரீஸ்வரி, தான் எம்.ஏ படித்துள்ளதாகவும், தனக்கு அரசு வேலை வழங்கி உதவ வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் 2 மணி நேரத்துக்குள் சுகாதாரத்துறை மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கணினி பிரிவில் வேலை வழங்க உத்தரவிட்டார். இதனை அடுத்து உடனடியாக மாரீஸ்வரிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதை சற்று எதிர்பார்க்காத மாரீஸ்வரி கண்ணீர் மல்க முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
