குலைச்சுக்கிட்டே இருந்த நாய்.. பூட்டிய வீட்டுக்குள்ள இருந்து வந்த துர்நாற்றம்.. அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்கள்.. திருப்பூரில் திக்.. திக்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பூட்டிய வீட்டுக்குள் மற்றும் ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பொங்குபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் எரிந்த நிலையில் ஒரு சடலம் கிடந்திருக்கிறது. இதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டனர். பின்னர் அது 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருடைய சடலம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமிராவை பார்த்தபோது, இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த மர்ம நபர் ஒருவர் மூட்டையை அங்கே போட்டு விட்டு திரும்பி செல்வது பதிவாகியுள்ளது.
சிசிடிவி
இதனால் இளைஞர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அங்கு கொண்டுவந்து எரியூட்டப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். மேலும், அந்த சிசிடிவி பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்ததில் அந்த நபர் பெருமாநல்லூர் சாலை, குமரன் காலனி வழியாக சென்றது தெரியவந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இதனிடையே தனியாக இருந்த வீடு ஒன்றுக்கு அருகே நாய் குரைத்தபடியே இருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்த வீட்டின் அருகே சென்றபோது கடும் துர்நாற்றம் வீசுவதை அதிகாரிகள் கவனித்திருக்கின்றனர். இதனையடுத்து பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள் அங்கே சடலம் புதைக்கப்பட்டதற்கான அடையாளம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
பரபரப்பு
உடனடியாக வருவாய்த் துறையினர், காவல்துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்திருக்கிறார்கள். இதனையடுத்து அந்த வீட்டில் இருந்து ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். திருப்பூரில் அடுத்தடுத்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
