பாழடைந்த வீட்டில் நடந்த வேலை.. தொழிலாளி கண்ட பொருள்.. "வீட்டோட ஓனருக்கே இவ்ளோ நாள் தெரியாம போச்சே"
முகப்பு > செய்திகள் > இந்தியாசுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாழடைந்த வீடு ஒன்றை இடிக்கும் போது, அதன் நடுவில் இருந்த பொருளும், அதன் பின்னர் அதனை எடுத்த தொழிலாளர்கள் செய்த செயலும் தற்போது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடு ஒன்றின் புனரமைப்பு பணி சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, 2600 சதுர அடி பரப்பளவு உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றிய சமயத்தில், சில தொழிலாளர்கள் அங்கே பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அந்த சமயத்தில், அங்கே தங்க நாணயங்கள் அடங்கிய உலோக பாத்திரங்கள் ஒன்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டெடுத்த தொழிலாளிகளில் ஒருவர், வீட்டின் உரிமையாளர் அல்லது அதிகாரிகள் என யாருக்கும் தெரிவிக்காமல் வேறொரு திட்டம் ஒன்றை போட்டுள்ளார். மொத்தமாக, தங்க நாணயங்கள், உலோக கலசம் மற்றும் தங்கத் துண்டு உள்ளிட்ட பல பொருட்கள் அதில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சுமார் எட்டு தொழிலாளர்கள் இதிலிருந்து கிடைத்த தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை பங்கிட்டுள்ளனர். மேலும், அதில் ஒருவர் தன்னுடைய நாணயத்தை தன்னுடைய செல்போன் பில்லை சரி கட்டுவதற்காகவும், புதிய பைக் ஒன்றை வாங்கவும், கை செலவுக்கும் வேண்டும் என வெறும் 56 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளூர்வாசி ஒருவருடன் விற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான், இந்த வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட எட்டு தொழிலாளர்களையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பேசும் போலீஸ் அதிகாரி ஒருவர், "எட்டு பேர் கொண்ட தொழிலாளர்கள் தான் இந்த வேலையை பார்த்துள்ளார்கள். அவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தொல்லியல் பெருமை பெற்ற அந்த ஒரு கிலோ தங்க எடை கொண்ட தங்க நாணயங்களையும் கைப்பற்றி உள்ளோம். நாங்கள் கைப்பற்றிய அந்த தங்க நாணயத்தின் தற்போதைய விலை ஒரு கோடி ரூபாய் வரை மதிப்புள்ளதாகும்" என கூறி உள்ளார்.
மேலும் அந்த பழைய வீட்டின் உரிமையாளர் இந்த சம்பவம் பற்றி பேசிய போது, கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இந்த பழைய வீட்டில் பலரும் வசித்து வந்த போதும் தங்கப் நாணயங்கள் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
Also Read | கடலின் 400 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த 100 வருச 'மர்மம்'.. "இத்தனை நாளா இது தெரியாம போயிருச்சே"