30 நாளுக்குள்ள 'அத' மட்டும் கரெக்ட்டா பண்ணிட்டா... 'கொரோனா 3-வது அலைய எப்படியாவது சமாளிச்சிடலாம்...' - ஐசிஎம்ஆர் கருத்து...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் அலை பரவி தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3-வது அலை குறித்த எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் மூன்றாம் அலை எப்போது தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தனது கணிப்பை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில், கொரோனா மூன்றாம் அலை, ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவை தாக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும், அவ்வறிக்கையில் ஐ.சி.எம்.ஆரின் முன்னணி விஞ்ஞானி பேராசிரியர் சமிரன் பாண்டா, கொரோனாவின் மூன்றாம் அலையில் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இதன் அளவை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், அதிவிரைவு தடுப்பூசி திட்டத்தை செயல்முறைக்கு கொண்டுவந்து, குறைந்தது நபருக்கு ஒரு டோஸ் மட்டும் போட்டால் கூட, ஒரு மாதத்தில் 75 சதவீதம் என்கிற இலக்கை எட்டலாம் எனவும் ஐசிஎம்ஆரின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் 75 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டால் மூன்றாவது அலை தாக்கினாலும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி சமாளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கொரோனாவின் கொரமான இரண்டாம் அலையை பார்த்து மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், ஐசிஎம்ஆர் ஆய்வில் மூன்றாம் அலை இரண்டாம் அலையை போல மோசமாக இருக்காது என மனம் குளிரும் விதமாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சென்னை போன்ற அதிகமக்கள் தொகையுள்ள பகுதியில் மக்கள் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனால்தான் தொற்று குறைந்துள்ளது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி, ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் தேசிய நோய் தொற்று அறிவியல் மையம் ஆகியவை இணைந்து நடத்திய முகக்கவசம் அணியும் ஆய்வில், 2019 அக்டோபர் மாதத்தில் குடிசைப் பகுதிகளில் 28 சதவீதம் பேரும், மற்ற பகுதிகளில் 36 சதவீதம் பேரும் முகக்கவசம் அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும், தற்போது நான்காம் கட்டத்தில் குடிசைப் பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வோர் எண்ணிக்கை 41 சதவீதமாகவும், மற்ற பகுதிகளில் 47 சதவீதமாகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக குறைய இதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.