2600 வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் சாப்பிட்ருக்காங்களா.? பாலைவனத்துல சிக்கிய மர்ம பானை.. அதிர வைக்கும் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இது பல ஆச்சர்யங்களை வெளிக்கொண்டுவந்துள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள சக்கார நெக்ரோபோலிஸ் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள கல்லறை அருகே சில பானைகளை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கின்றனர். டெமோடிக் எழுத்துகள் பொறிக்கப்பட்ட இந்த களிமண் பானைகளுக்குள் வெள்ளை நிற பாலாடைக்கட்டி (சீஸ்) இருந்திருக்கிறது. இதனை பண்டைய எகிப்திய மக்கள் ஹல்லூமி என்று அழைத்திருக்கின்றனர்.
பாலாடைக்கட்டி
இதற்கு ஹலோமி என்ற பெயரும் இருந்திருக்கிறது. இது ஆடு மற்றும் செம்மறி பால் மற்றும் சில சமயங்களில் பசுவின் பால் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் பாரம்பரிய சைப்ரஸ் சீஸ் ஆகும். இது அதிக உருகுநிலையைக் கொண்டது. ஆகவே மக்கள் இதனை இறைச்சிக்கு மாற்றாக பயன்படுத்தி வந்திருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கின்றனர். இதனை ஆய்வுக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் இது கிமு 688 மற்றும் 525 க்கு இடையில் 26 மற்றும் 27 வது வம்சங்களின் காலத்தில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என்கின்றனர்.
இந்த ஆராய்ச்சியில் பல கொள்கலன்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை விரைவில் திறக்கப்படுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பேசிய தொல்பொருளியல் உச்ச கவுன்சிலின் செயலாளர் டாக்டர் முஸ்தபா வஜிரி,"பண்டைய எகிப்தியர்கள் ஹலோமி பாலாடைக்கட்டியை 'ஹராம்' என்று குறிப்பிட்டனர். ஆனால் இது காப்டிக் காலங்களில் 'ஹாலூம்' என்று பெயர் மாறி, இறுதியில் 'ஹாலூமு சீஸ்' ஆனது" என்றார்.
இதற்கு முன்பே
சக்காரா நெக்ரோபோலிஸில் பகுதியில் சீஸ் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே Ptahmes கல்லறையில் திட சீஸ் கட்டிகள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.