அவ்ளோ கஷ்டத்த பார்த்துட்டேன்.. இப்போ என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு.. ரொனால்டோவின் காதலி உருக்கம்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Jan 11, 2022 02:04 PM

கால்பந்து விளையாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ரொனால்டோவின் பெண் தோழி ஒரு டாக்குமெண்ட்ரிக்காக தான் பட்ட கஷ்டத்தை பகிர்ந்துள்ள செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cristiano Ronaldo\'s girlfriend tells of struggles in life

கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் ஆதர்ஸ நாயகர்களாக கருதப்படுபவர்கள் அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர். இதில் மெஸ்சியின் ரசிகர்களுக்கும், ரொனால்டோவின் ரசிகர்களுக்கும் கைகலப்பு வரை கூட சென்றிருக்கிறது. இவர்கள் இருவரும் கால்பந்தின் சிறந்த விருதான பலோன் டி'ஆர் விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.

Cristiano Ronaldo's girlfriend tells of struggles in life

எழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரொனால்டோ:

எழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரொனால்டோ தன்னுடைய கால்பந்து மூலம் மட்டுமல்லாமல், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். மேலும், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் சுமார் 5 வருடம் இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்டார்.

Cristiano Ronaldo's girlfriend tells of struggles in life

அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். அர்ஜென்டினாவை பூர்விகமாக கொண்ட ஜார்ஜினா, பின்னர் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் குடியேறினார். ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது, உள்ளாடை மாடலிங் செய்து வந்த ஜார்ஜியாவுக்கு, ரொனால்டோவின் நட்பு கிடைத்தது. அதில் இருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

Cristiano Ronaldo's girlfriend tells of struggles in life

திருமணம் செய்யாமல் குடும்ப வாழ்க்கை:

திருமணம் செய்யாமல் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் குடும்பம் நடத்தி வரும் ரொனால்டோவு்கு கடந்த 2017-ல் அலானா மார்ட்டினா என்ற குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் விரைவில் இரட்டை குழந்தை பெற்றெடுக்கப் போகிறேன் என  ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தெரிவித்திருந்தார்.

டாக்குமெண்டரி படம்:

இந்நிலையில், இணைய தளம் ஒன்று ஜார்ஜினாவை வைத்து டாக்குமெண்டரி படம் எடுத்தது. ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் டாக்குமென்டரி ஜனவரி 28-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. அதில், தான் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்து, தற்போது சொகுசான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன் என்பதை விவரித்துள்ளார்.

Cristiano Ronaldo's girlfriend tells of struggles in life

அதில், 'கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்த நாளில் இருந்து என்னுடைய வாழ்க்கை மாறியது. செர்ரானோவில் நான் முன்னதாக கைப்பை விற்றுக் கொண்டிருந்தேன். தற்போது அவற்றை வாங்கி குவிக்கிறேன்.

மலிவான பிளாட் கிடைக்குமா?

முதலில் மிகவும் குறைந்த வாடகையில் மலிவான பிளாட் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். மாத வாடகை என்னுடைய பட்ஜெட் 250 யூரோவிற்குள்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். கடைசியாக ஒரு பிளாட்டில் ஸ்டோரேஜ் ரூம் கிடைத்தது. குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும். கோடைக்காலத்தில் சமாளிக்க முடியாத அளவில் வெப்பமாக இருக்கும்.

எப்போதும் நாம் எங்கிருந்து வந்தமோ, அந்த பாதையை மறந்து விடக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. குழந்தைகளை நினைக்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப்படுவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #CRISTIANO RONALDO #GIRLFRIEND #STRUGGLES #LIFE #கிறிஸ்டியானோ ரொனால்டோ #வாழ்க்கை #போராட்டங்கள் #தோழி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cristiano Ronaldo's girlfriend tells of struggles in life | World News.