'ரொனால்டோ மைண்ட் வாய்ஸ்'... 'அடேய், ஒரே வீடியோல இப்படி சல்லி சல்லியா நொறுக்கிட்டியே'... வைரலாகும் செம FUN வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிறிஸ்டினா ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ - கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

கால்பந்து வீரர்களில் உலகம் முழுவதும் தனக்கெனப் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரொனால்டோ. இந்த நிலையில் யூரோ கால்பந்தாட்டத் தொடரில் நேற்று ஹங்கேரி அணியும், போர்ச்சுகல் அணியும் மோதின. இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பங்கேற்றார்.
அப்போது அவரது மேசைக்கு முன்னர் தண்ணீர் பாட்டில்களுடன் இரண்டு கோகோ - கோலா பாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட ரொனால்டோ இரண்டு கோகோ -கோலா பாட்டில்களையும், நகர்த்தி தனது முன்னால் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து என்னிடம் தண்ணீர் உள்ளது என்று காட்டினார்.
ரொனால்டோவின் இந்தச் செயல் காரணமாக கோகோ -கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வகையில் கோகோ - கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 4 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, என்ன கண்டெண்ட் கிடைத்தாலும் அதை நன்றாக வச்சு செய்யும் நெட்டிசன்கள் ரொனால்டோ செய்த சம்பவத்தை விட்டு விடுவார்களா என்ன.
அந்த வகையில் ரொனால்டோவின் செய்தியாளர்கள் சந்திப்பு வீடியோவை தனது தொலைக்காட்சி பெட்டியில் போட்டுவிட்டு, ரொனால்டோ கோகோ - கோலா பாட்டிலைத் தூக்கி ஓரமாக வைக்கும் போது, அதனை தனக்குக் கொடுப்பது போல நடித்து நெட்டிசன் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
People 😂😂 #Ronaldo pic.twitter.com/gklHqQAdcM
— 🅐🅑🅗🅘 (@AbhishekGureja) June 18, 2021

மற்ற செய்திகள்
