ப்ரேக் அப் ஆகிடுச்சு.. எப்படியாவது செலவு பண்ண காசை திருப்பி எடுத்திடணும்.. முன்னாள் காதலன் செய்த ‘பலே’ காரியம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் காதலி தூங்கிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த இளம்பெண்ணும், இளைஞரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
காதலிக்கும் போது தனது காதலிக்காக செலவு செய்த பணத்தை மீட்டு விட வேண்டுமென அந்த இளைஞர் நினைத்துள்ளார். அதன்படி தனது முன்னாள் காதலியின் வீட்டுக்கு இரவு நேரம் சென்றுள்ளார். அப்போது அவர் மாத்திரை சாப்பிட்டு நன்றாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
இதனை பார்த்த அவர் முன்னாள் காதலியின் செல்போனை எடுத்துள்ளார். ஆனால் போன் லாக் செய்யப்பட்டு இருந்துள்ளது. தனது முன்னாள் காதலி ஃபேஸ் லாக் போட்டிருப்பது இவருக்கு தெரியும் என்பதால், உடனே செல்போனை அப்பெண்ணின் முகத்துக்கு நேராக வைத்து லாக்கை எடுத்துள்ளார்.
பின்னர் அவரது அக்கவுண்டில் இருந்த சுமார் 18 லட்சம் ரூபாயை தனது அக்கவுண்டுக்கு மாற்றியுள்ளார். காலையில் கண்விழித்து பார்த்தபோது 18 லட்சம் சென்றதற்கான மெசேஜ் செல்போனில் வந்ததை கண்டு அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் இளைஞரை போலீசார் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மற்ற செய்திகள்
