'ஓமிக்ரான்' வைரஸால நம்ம 'வாழ்க்கைய' இழக்குறதுக்கு பதிலா...' பேசாம 'இத' பண்ணிட்டு போலாம்...! - WHO இயக்குனர் விடுத்த எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Dec 22, 2021 03:18 PM

பண்டிகை கால கூட்டங்களில் ஓமிக்ரான் வைரஸ் அதிக பரவ வாய்ப்புள்ளதால் உயிரை விட கொண்டாட்டம் பெரிதல்ல என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tetros Adonom said the celebration is no bigger than life

பொதுவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் டிசம்பர் மாதம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பொது இடங்களுக்கு சென்று பண்டிகை நாளை கொண்டாடுவார்கள். அதோடு பூங்கா, மால்ஸ், பொழுது போக்கான இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சேரும்.

ஆனால்  பண்டிகை மாதமான டிசம்பரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஒமைக்கரான் வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. வரும் நாட்களில் பொதுமக்கள் இன்னும் அதிகளவில் கூடும் போது,  ஒமைக்ரான் வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்ற பண்டிகைகளை ரத்து செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுக்குறித்து ஜெனிவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் அதானோம் 'அமெரிக்கா இப்போதிருக்கும் சுழலில் மிகுந்த பாதுக்காப்போடு இருக்க வேண்டும். இன்னும சில வாரங்களில் ஓமிக்ரான் பாதிப்பு ஆதிக்கம் செலுத்தும் என அந்நாட்டு சுகாதார அமைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சுழலில் பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேணடும் அல்லது தள்ளிப்போட வேண்டும். நம்முடைய வாழ்க்கை முழுவதுமாக இந்த பூமியில் இருந்து ரத்தாவதைவிட, நிகழ்ச்சி ரத்தாவது சிறந்தது.

தற்போது கொண்டாடி விட்டு பின்னர் வருத்தப்படுவதை விட, தற்போது ரத்து செய்து விட்டு பின்னர் கொண்டாடுவது சிறந்தது' என கூறியுள்ளார். இதுவரை அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரி ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #TETROS ADONOM #LIFE #டெட்ரோஸ் அதானோம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tetros Adonom said the celebration is no bigger than life | World News.