Kadaisi Vivasayi Others

மகனை அடக்கம் செய்த சில நாளில்.. மருமகளின் செல்போனை பார்த்து ஆடிப்போன மாமனார்.. நடுரோட்டில் மறியல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Feb 10, 2022 06:06 PM

திருப்பத்தூர் அருகே ரகுபதியூர் பகுதியைச் சேர்ந்த முருகன், சாந்தி தம்பதியினரின் மகன் நவீன்குமார். 29 வயதான இவர் அதே ஊரில் அழகு நிலையம் ஒன்றினை நடத்தி வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன் குமாருக்கும் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மகள் விசித்ரா (23) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு  மோனிஷ் (4) என்கிற மகனும், தன்ஷிகா (2) என்ற மகளும் உள்ளனர்.

Relatives of Deceased man protest for police investigation

"இந்த டீ -க்கு விலையே கிடையாது" ஆனந்த் மஹிந்திரா போட்ட லேட்டஸ்ட் ட்வீட்..!

இந்நிலையில் விசித்ரா தனது அத்தை மகனான குமாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (24) என்பவருடன் நெருங்கிப் பழகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி, நவீன் குமார் வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடப்பதாக நவீன் குமாரின் தந்தை முருகனிடம் விசித்ரா மற்றும் சீனிவாசன் தெரிவித்திருக்கின்றனர்.

இதனையடுத்து உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நவீன் குமாரை கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நவீன் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து நொறுங்கிப்போன முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகனின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் நவீன் குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சந்தேகம்

இந்நிலையில், மகனின் மரணத்தில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதாக உணர்ந்த முருகன் தனது மருமகளை கண்காணிக்கத் துவங்கியிருக்கிறார். அப்போதுதான் விசித்ராவின் மொபைல் போன்  முருகனிடத்தில் சிக்கியிருக்கிறது. அதில், சீனிவாசனுடன் மணிக் கணக்கில் விசித்ரா பேசியிருப்பதை கண்டறிந்திருக்கிறார் முருகன்.

போலீஸ் புகார்

தன்னுடைய மகனின் மரணத்திற்கு மருமகள் விசித்ரா தான் காரணம் என திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் உறவினர்களுடன் சென்று முருகன் புகார் அளித்திருக்கிறார். இருப்பினும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்காத காரணத்தினால் கோபமடைந்த முருகன் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பிப்ரவரி 8 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நேற்று திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் முன்னிலையில் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவர் கலைச்செல்வியுடன் நான்கு பேர் கொண்ட குழு நவீன்குமார் உடலைத் தோண்டி எடுத்து மறு உடற்கூராய்வுக்குத் தேவைப்படும் உடல் பாகங்களை எடுத்துச் சென்றனர்.

நடைபெற இருக்கும் இந்த மறு உடற்கூறாய்வு அறிக்கை வெளிவந்தால் தான் நவீன்குமார் மரணத்தின் மீது ஏற்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

ஆளுக்கும் எடைக்கும் சம்பந்தமில்லையே..போலீஸ் எக்ஸாமில் இளம்பெண்ணின் உடையை அகற்றச் சொன்ன அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Tags : #THIRUPATHUR #MAN #PROTEST #POLICE INVESTIGATION #திருப்பத்தூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Relatives of Deceased man protest for police investigation | Tamil Nadu News.