மண்ணுக்கடியில் புதைச்சு வச்சிருந்த ஒரு பெட்டி.. பக்கத்துலயே இன்னொரு இடத்த தோண்டி பார்த்தப்போ.. 'ஷாக்' கொடுத்த குடும்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்தென்னாப்பிரிக்காவின் ஒரு தம்பதிகளின் வீட்டின் பின்புறம் மண்ணுக்கடியில் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உழைத்து பணம் ஈட்டுவதை விட குறுக்கு வழியில் அரசுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பது அதிகமாகி விட்டது. குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் இந்த மாதிரியான சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் இந்த மாதிரியான குற்ற செயல்களில் ஈடுபடும் போது நாம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கலாம் என பல தந்திரங்களை யோசிக்கின்றனர். ஆனால் என்றாவது ஒருநாள் அவர்களின் திருட்டுத்தனங்கள் அனைத்தும் வெளியே வந்து தான் ஆகும்.
இப்படி திருட்டு தனமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் அதனை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைத்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக பல திட்டங்கள் போடப்படும். அப்படி ஒரு சம்பவம் தான் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் Chad Rick Modra (38) மற்றும் அவரின் பெற்றோரான Andrew Modra (62), Carolyn Patricia Modra (59) என்பவர்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
மண்ணுக்கடியில் இருந்து கிடைத்த பணம்:
ஏனென்றால், காவல் துறை அதிகாரிகள் இவர்களின் வீட்டு கொல்லைப்புறத்தில் இருந்து சுமார் 600 கிராம் போதை பொருட்கள் ஒரு இடத்திலும், மற்றொரு இடத்தில் ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக 50,870 டாலர் அளவில் பணத்தையும், நகைகளையும் மண்ணுக்குள் இருந்து எடுத்துள்ளனர்.
பணமோசடி வழக்கு பதிவு:
இந்த குடும்பத்தார் மீது ஏற்கனவே போதை பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்நிலையில் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வைத்திருந்தல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தற்போது Carolynக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், வரும் வாரங்களில் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
