'தமிழகத்தில்' பெட்ரோல், டீசல் விலை 'உயர்வு'... 'இன்று' நள்ளிரவு முதல் 'அமல்'... தமிழக அரசு 'அறிவிப்பு'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 03, 2020 08:52 PM

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

Price Hike TN Government Ordered To Increase Vat On Petrol Diesel

கொரோனா பாதிப்பு காரணமாக உலக நாடுகள் மிகப் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருவதால், கச்சா எண்ணெய் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாத நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அரசுக்கு  ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரி கட்டும் வகையில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "பெட்ரோலுக்கான மதிப்பு கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.25 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.50 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது" எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (மே 03) காலை நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 72.28 ரூபாய்க்கும், டீசல் 65.71 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.