தமிழகத்தில் இதுவரை 'இல்லாத' உயர்வு... '12 மாவட்டங்களில்' இன்று 'புதிய' பாதிப்பு... 3000ஐக் கடந்த 'மொத்த' எண்ணிக்கை... 'விவரங்கள்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 03, 2020 07:42 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 266 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

266 New Corona Positive Cases In Tamil Nadu 203 In Chennai May 3

தமிழகத்தில் இன்று மட்டும் சென்னை - 203, விழுப்புரம் - 33, கடலூர் - 9, கள்ளக்குறிச்சி - 6, கோவை - 4, அரியலூர், மதுரை, தென்காசி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை  ஆகிய மாவட்டங்களில் தலா 1 என மொத்தமாக 266 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்முலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 வயது நபர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து ஆயிரத்து 379 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.