'தமிழகத்தின்' இன்றைய (02-02-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (02-02-2021) ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,517 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து கோயம்பத்தூரில் 54 பேருக்கும், செங்கல்பட்டில் 27 பேருக்கும் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் இதுவரை 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 521 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,22,468 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,367 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

மற்ற செய்திகள்
