'இப்படி' பண்ணிட்டீங்க இல்ல...? பாருங்க, அதுக்கான 'விளைவு' ரொம்ப மோசமா இருக்கும்...! - பகிரங்க 'மிரட்டல்' விடுத்த சீனா...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் அதற்கான விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என சீனா மிரட்டல் விடுத்துள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பெப்ரவரி மாதம் 4-ம் திகதி முதல் 20-ம் திகதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்தது, இதனைத் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டன அறிக்கை வெளியிட்டன.
இந்த நிலையில் சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்கவுள்ளதாகக் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா திடீரென அறிவித்தது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 'உய்குர்' முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையில் சீனா ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, இதன் காரணமாகக் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணிக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டது.
அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அரசு அதிகாரிகளை அனுப்ப போவதில்லை எனவும் விளையாட்டு வீரர்களை மட்டும் அனுப்ப போவதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், தங்கள் மீது உண்மைக்கு புறம்பான பழிபோட்டு ஒலிம்பிக் போட்டியில் அரசியல் செய்வதாக சீனா அமெரிக்காவை கண்டித்துள்து. அதுமட்டுமல்லாமல், போட்டியைப் புறக்கணிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும்போது, "அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் தங்கள் அரசியல் நிலைபாடுகளுக்காக ஒலிம்பிக் போட்டிகளைப் பயன்படுத்துகின்றன. இந்த நாடுகள் செய்யும் மிகப்பெரிய தவறுக்கு நிச்சயம் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்றார்.