பிபின் ராவத் கடைசி நேரத்துல 'என்ன' சொன்னார்...? - மீட்பு பணியில் ஈடுபட்டவர் உருக்கம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசி நேரத்தில் கையெடுத்து கும்பிட்டபடியே இருந்தார் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த குன்னூரைச் சிவக்குமார் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி மனம் உடைய செய்யும் விதமாக உள்ளது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த புதன்கிழமை அன்று குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் திடீரென எதிர்பாரதவிதமாக விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேரில் குரூப் கேப்டன் வருண் சிங் தவிர மற்ற 13 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
பலியானவர்கள் உடல்கள் நேற்று முன்தினம் (09-12-2021) டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நேற்றைக்கு பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் உடல்கள் ஒரே தகனத்தில் வைத்து இறுதி சடங்கு செய்யப்பட்டது. மேலும் இன்று இருவரது அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இன்று மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து நடந்தபின் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த குன்னூரை சிவக்குமார் என்னும் நபர் அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்களை நான் கண்டவுடன் என்னிடம் தண்ணீர் கேட்டார். கவலைப்படாதீர்கள், நாங்கள் உங்களை கண்டிப்பாக காப்பாற்றி விடுவோம் என்று அவரிடம் கூறியபோது அவர் கையெடுத்துக் கும்பிட்டார். ஆம்புலன்சில் ஏற்றுகிற வரைக்கும் அவர் கையெடுத்து கும்பிட்டபடியே இருந்தார்.
அதன் பிறகு, மூன்று மணி நேரம் கழித்து இராணுவ அதிகாரிகள் அவர் இறந்துவிட்டார் என்று கூறிய போது மிகுந்த வேதனையாக இருந்தது என குன்னூரை சேர்ந்த சிவக்குமார் கூறியுள்ளார்.