Jail Others
IKK Others
MKS Others

'விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு குட்நியூஸ்...' தமிழக அரசு 'சூப்பர்' அரசாணை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Dec 11, 2021 11:16 AM

சென்னை: விவசாயிகள் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் கால்நடை வளர்ப்புக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

tn govt announce interest waived if farmers repay loans on time

தமிழக அரசு வெளியிட்டிருக்கும்  அரசாணையில்  கூறியிருப்பதாவது: கேசிசி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது விவசாய கடன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி கால்நடை வளர்ப்பு மற்றும் தொடர்புடைய கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

tn govt announce interest waived if farmers repay loans on time

அதன்படி, நடைமுறை மூலதனக்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே இந்த கடன் வழங்கப்பட வேண்டும். கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தற்போது வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் ₹1.60 லட்சம் வரை தனி நபர் ஜாமீன் அடிப்படையில் பிணையமின்றி கடன் வழங்குவது போல், இதற்கு வழங்கலாம். வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன்தொகை ₹3 லட்சத்திற்கு உட்பட்டு கடன் வழங்கப்படும். பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு வழங்கப்படும் நடைமுறை மூலதன கடன் இரண்டும் சேர்ந்து ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயிர்க்கடன் ஏதும் பெறாமல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு மட்டும் வழங்கப்படும் நடைமுறை மூலதனக் கடன் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உரிய காலத்திற்குள் நடைமுறை மூலதன கடனை திருப்பி செலுத்தினால் 7% வட்டி ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். சொந்த நிதியை பயன்படுத்தும் கூட்டுறவுச் சங்கம், வங்கிகளுக்கு 2% வட்டி மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் இந்த திட்டத்திற்கு வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தவறாது பின்பற்ற வேண்டும்" இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு கடன் பெற என்ன செய்ய வேண்டும்:

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்போருக்கு தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளின் மதிப்பில் 20 சதவீத தொகை கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக கிசான் கடன் அட்டை மூலம் கடன் வழங்கப்படும்.

tn govt announce interest waived if farmers repay loans on time

எனவே கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அத்துடன் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு புகைப்படம், நில ஆவணங்கள் நகல் ஆகியவற்றை இணைத்து வாரநாட்களில் சமம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவரிடம் மற்றும் சிறப்பு முகாம்களிலும் வருகிற 25.2.2022-க்குள் சமர்பிக்கலாம். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

கால்நடை வளர்ப்போர், எந்த அடமானமும் இல்லாமல் வங்கிகளில் குறைந்த வட்டியில் ரூ1.60 லட்சம் வரை கடனாக பெற, கால்நடை உழவர் கடன் அட்டை திட்டம் (Pashu Kisan Credit Card Scheme) பேருதவியாக இருக்கும். கால்நடை உழவர் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.

Tags : #TAMILNADUASSEMBLY #MKSTALIN #TN GOVT #FARMERS #LOANS #விவசாயிகள் #வட்டி #தள்ளுபடி #கடன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn govt announce interest waived if farmers repay loans on time | Tamil Nadu News.