அதி வேகமாக பரவும் புதிய கொரோனா... உச்சகட்ட பரபரப்பில் உலக நாடுகள்!.. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?.. விரிவான தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 22, 2020 01:27 PM

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இந்த வைரஸ் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

britain uk new coronavirus strain what people need to know details

பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது.

புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து நிறைய சந்தேகங்களும், நிறைய விடை தெரியாத கேள்விகளும் இருக்கின்றன. இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பணிகள் எல்லாமே தொடக்க நிலையில் தான் இருக்கின்றன.

புதிய வகை கொரோனா வைரஸ் (கோவிட்-19) : கவலைகொள்ளவைப்பது எது?

வேகமாக பரவும் திறன்கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது தற்போது பரவியிருக்கும் கொரோனா வைரஸ் வகையை விடவும் 70% வேகமாக பரவக்கூடியது என நம்பப்படுகிறது. பிரிட்டன் அதிகாரிகள், பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய நிலையை புதிய வகை கொரோனா வைரஸ் தாண்டிவிட்டது என தெரிவிக்கிறார்கள்.

புதிய வகை கொரோனா வைரஸ், எந்த அளவுக்கு பொதுவானது? செப்டம்பர் மாதம் 2020-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த கொரோனா வைரஸ் வகையானது, வேகமாக பரவக்கூடிய வகையாகவும், வீரியம் அதிகமானதாகவும் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கிறது. 

டிசம்பர் மாதத்தில் 60% தொற்று, இந்த வகை வைரஸ் காரணமாகவே ஏற்பட்டிருப்பதாக, பிரிட்டன் அரசின் மூத்த விஞ்ஞான ஆலோசகரான பேட்ரிக் வேலன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் மட்டுமே இருக்கிறதா?

லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்து பகுதிகளில் இவ்வகை தொற்று அதிகமாக காணப்படுகிறது.  டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளில் மிகச்சிலருக்கு தொற்று இவ்வகை தொற்று காணப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ், அதிக ஆபத்தானதா?

புதிய வகை வைரஸ், ஏற்கனவே இருக்கும் வகை வைரஸை விட வேகமாக பரவுகிறது. ஆனால் அதிக ஆபத்தானது என்பது எங்கும் நிரூபிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

வைரஸில் புதிய வகைகள் உருவாவது இயற்கைக்கு மாறானதா?

வைரஸ்கள் எப்போதும் புது வகைகளை, மாற்றங்களை கைக்கொள்கிறது. பெரும்பாலான புதிய வகைகள் அழிந்துவிடுகின்றன. சில நேரங்களில், வைரஸின் பண்புகளை மாற்றாமல் அது பரவுகிறது. மிக அரிதாக, புதிய அதிக அளவிலான மாற்றங்களுடன் பரவும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வழங்கப்படும் நடைமுறையையும், தற்போது அளிக்கப்படும் சிகிச்சையையும் இது பாதிக்குமா?

புதிய வகை வைரஸ்கள், தடுப்பூசிகள் வழங்கப்பட்டாலும் தீங்கு விளைவிக்கும் விதமாக செயல்படுவதாக எங்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என அந்நாட்டு அதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைத் தவிர மற்ற நாடுகள் எப்படி இதை அணுகுகின்றன?

அயர்லாந்து, ஜெர்மனி, ப்ரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகள், புதிய வகை வைரஸ்கள் எதுவும் பரவாமல் தடுக்க, அங்கிருந்து தங்கள் நாட்டுக்கான பயணத்தைத் தடை செய்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Britain uk new coronavirus strain what people need to know details | World News.