‘உருமாற்றம் அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘இந்த நாடுகளிலும் பரவியிருக்கலாம்’... ‘உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Dec 22, 2020 12:36 PM

புதியவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் பரவியிருக்க கூடும் என்று உலக சுகாதார ஆய்வு அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Mutant Virus May Be Present In Many Nations: WHO Chief Scientist

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுதையடுத்து, அங்கு லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டில், கொரோனா தொடர்பாக ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதால்,  அவர்கள் புதிய வகை வைரசை கண்டுபிடித்திருக்க கூடும் என்று மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘புதிய வைரஸ் 70 சதவீத வேகத்துட்ன் பரவி வருவதாக ஆரம்பகால ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், இங்கிலாந்து இரசு இதுதொடர்பாக தக்க நேரத்தில் கவனமாக நடவடிக்கை எடுத்துள்ளது. பிற நாடுகளிலும், இதேபோன்ற வைரஸ் அல்லது உருமாறிய வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு உள்ளதை மறுக்க முடியாது. இங்கிலாந்து மட்டுமல்ல, இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில், இதேபோன்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக சமீபத்தில் இங்கிலாந்து தெரிவித்திருந்தது.

அதுமட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவில் வேறு மாதிரியான கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. வைரஸ்களில் பல மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்தான். அதில் எது ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் வகையோ, அது பரவும். இதுவும் அப்படியான ஒரு மாறுபாடாகத்தான் இருக்க முடியும். புரத அமைப்பை மாற்றிக்கொண்டு, தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாற்றம் பெற்றிருக்கும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதே எனது கருத்து.

புதிய வகை கொரோனா வைரசின் தன்மையை அறிவதற்காக ஆய்வுகளை செய்து வருகிறோம். இன்னும் இரண்டு வாரங்களில், அதுகுறித்த உண்மை நிலை தெரியவரும். இப்போதைக்கு அந்த வைரசையும் தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் எங்கள் கருத்து.

புதிய வகை வைரசாக இருந்தாலும் கூட, ஏற்கனவே எடுக்கப்படும் நோய் பரவல் தடுப்பு முறைகளான, முகக் கவசம், கைகளை சோப்பு போட்டு கழுவுதல் போன்ற நடைமுறைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றினால் போதுமானது. இதற்காக புதிதாக எந்த நடவடிக்கையும் தேவையில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

வேகமாக பரவும் வைரஸ் என்பதால், இங்கிலாந்து நாட்டுடனான விமானச் சேவைகளை பல ஐரோப்பிய நாடுகள் தடை செய்துவிட்டன. இந்தியாவும் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தடை செய்வதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mutant Virus May Be Present In Many Nations: WHO Chief Scientist | World News.