“உணர்வுகளை கிளறியதுக்காக வருந்துகிறோம்.. காயம்பட்ட உணர்வுகளின் நலன் கருதி..”.. விளம்பர சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த டனிஷ்க்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 14, 2020 04:35 PM

நகை தயாரிப்பில் ஈடுபட்டு வரும்  டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தில் ஒரு பிரிவான டனிஷ்க், பண்டிகை காலத்தையொட்டி வெளியிட்ட புதிய விளம்பரப் படத்தில்,  இஸ்லாமியக் குடும்பம் ஒன்று தங்களது இந்து மருமகளுக்காக, இந்து முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவதாகவும் அதில் மருமகள் தனது மாமியாரிடம், “இது உங்கள் வீட்டு வழக்கம் இல்லையே” என்றதும், அதற்கு அந்த மாமியார், “எல்லா வீட்டிலும் மகள்களை சந்தோஷமாக வைத்திருத்தல் வழக்கம் தானே” என்று பதில் அளிக்கிறார்.

tanishq withdraws its controversy ad Says hurting sentiments

இந்நிலையில் இந்த விளம்பரம் லவ் ஜிகாதை விளம்பரப்படுத்துகிறது  என்றும் அதனால் டனிஷ்க்கை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி #BoycottTanishq என்கிற ஹாஷ்டேக் மூலமாக பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுவதாக டனிஷ்க் நிறுவனம் அறிவித்துள்ளது. 

tanishq withdraws its controversy ad Says hurting sentiments

இது தொடர்பான டனிஷ்க் நிறுவனத்தின் அறிக்கையில், ‘இந்த இக்கட்டான காலகட்டத்தில், பலதரப்பட்ட் மக்கள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடுவதுதான். எனினும் தற்செயலாக பலரது உணர்வுகளை கிளறியதற்காக வருந்துகிறோம். காயப்பட்ட உணர்வுகள், எங்களது ஊழியர்கள், கூட்டாளிகள் பணியாளர்களின் நலன் கருதி இந்த விளம்பரப் படத்தைத் திரும்பப் பெறுகிறோம்’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ஷோபா டே, சேட்டன் பகத் உள்ளிட்ட பலரும் இந்த விளம்பரப் படத்தைப் பாராட்டினர். இந்த விளம்பரத்தில் எந்த தவறும் இல்லை, மிரட்லுக்கு அஞ்சன் கூடாது என்று சேட்டன் பகத் கூறியுள்ளார். இதேபோல், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமும் டனிஷ்க் ஆதரவு ட்வீட்டுக்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். நடிகை கங்கணா ரணாவத் இந்த விளம்பரப் படத்தில் உள்ள கருத்து தவறல்ல என்றும், ஆனால் அது சொல்லப்பட்ட விதம் தவறு என்றும் “ஒரு இந்து மருமகள், தங்கள் குடும்பத்தின் வாரிசைச் சுமக்கும் போது மட்டும் தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tanishq withdraws its controversy ad Says hurting sentiments | India News.