'பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போய்... ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான வீரர்...!!! ‘ பாவம், அதுக்கு’ன்னு அவர இப்படியா வறுத்து எடுக்கறது??!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 14, 2020 04:59 PM

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

kuldeep yadav bday wishes to gambhir makes dig at dinesh karthik

கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தற்போதைய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் குல்தீப் யாதவ், கவுதம் கம்பீருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். 

 

அதில், 'எப்போதும் என் மீது அதிகம் நம்பிக்கை கொண்ட மனிதருக்கும், நான் கிரிக்கெட்டை அதிகம் கற்றுக் கொண்ட காரணமாக இருந்த கவுதம் கம்பீருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, கம்பீர் ஐபிஎல் தொடரில் ஆடிய போது அதிக வாய்ப்புகள் குல்தீப் யாதவுக்கு கிடைத்தது. 

 

ஆனால், இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் குல்தீப் யாதவ், இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இதன் காரணமாக தற்போதைய கேப்டன் தினேஷ் கார்த்திக்கை மறைமுகமாக தாக்கும் படி, குல்தீப் ட்வீட் அமைந்திருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் ரசிகர்கள், தினேஷ் கார்த்திக் மீது தவறு உள்ளது என்றும், நீங்கள் வேறு அணிக்கு ஆட தகுதி உள்ளவர்கள் என்றும் குல்தீப்பிற்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kuldeep yadav bday wishes to gambhir makes dig at dinesh karthik | Sports News.