'முடி வெட்டின பிறகு சும்மா ஹாலிவுட் ஹீரோ மாதிரில இருக்காரு...' 'மூஞ்சுல முடி இருக்குறப்போ சிரிக்கிறாரா அழுறாரான்னு கூட தெரியல...' - சலூன் கடைக்காரர் செய்த நெகிழ்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்வீடு இல்லாமல் தெருவில் வாழும் நபருக்கு தாடி, முடியை சவரம் செய்து ஹாலிவுட் ஹீரோ போல ஆக்கியுள்ளார் பிரெஞ்சு பிரபல முடிதிருத்தும் டேவிட் கோடாட்.

டிக்டாக் மூலம் பிரபலமடைந்த, பிரெஞ்சு முடிதிருத்தும் டேவிட் கோடாட் என்பவர், தனது வாடிக்கையாளருக்கு முடி வெட்டி அவரின் இரு புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், இருக்கும் நபர் வீடு இல்லாமல் தெருவில் வசிப்பவர் எனவும், முடி திருத்த காசு இல்லாமல், நீளமான முடி மற்றும் தாடியை வைத்துள்ளார். அவரது தாடி இவ்வளவு நீளமாக இருப்பதால், அவர் சிரிக்கிறாரா இல்லையா என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
டேவிட் தன் வேலையை ஆரம்பித்து சில நிமிடங்களில் அந்த நபரின் அழகிய தோற்றம் கண்ணனுக்கு விருந்தாளிப்பதாக வீடியோவில் தெரிகிறது. மேலும் இந்த வீடியோ கிட்டத்தட்ட 3,000 லைக்குகளையும் அதிக அளவில் பகிரவும் செய்யப்பட்டுள்ளது.
வீடியோவின் கீழ் பலர் டேவிட்டிற்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர், மேலும் முடிவெட்டிக்கொண்ட நபரின் அழகை கண்டு அனைவரும் வியப்படைகின்றனர்.

மற்ற செய்திகள்
