'இனி ரேப்பிஸ்ட்களுக்கு இங்க மரண தண்டனை தான்...' - அவசர சட்டத்தை அமல்படுத்திய நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Oct 13, 2020 03:03 PM

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இனி உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும் என்ற சட்டம் வங்க தேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

bangladeshsexual assault criminals law death penalty

பொதுவாக பெண்களுக்கு எதிரான மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றனர். இம்மாதிரியான கொடூர சம்பவங்களுக்கு பல சட்டங்களும், தண்டனைகளும்  நடைமுறையில் இருப்பினும் பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை.

தற்போது வங்கதேசத்தில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டம் இன்று முதல் அமலாக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு வங்கதேசத்தில் 37 வயது பெண்மணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ அந்நாட்டின் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதையடுத்து வங்கதேச அரசு உடனடியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய அவசரச் சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மேலும் தற்போது இந்த சட்ட மசோதாவுக்கு வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் ஒப்புதலுக்குப் பின் இன்று அமலாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bangladeshsexual assault criminals law death penalty | World News.